சென்னை: பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவில் இருந்து Elite வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய டிசம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும்.
விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies).. நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. விப்ரோவில் அடிக்கடி காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய பணி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Image: AI created
தற்போதைய அறிவிப்பின்படி விப்ரோ நிறுவனத்தில் Elite - Telecom, Automotive, Embedded & CPPE (Security, Java Full Stack) FY 25 என்ற பெயரில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி
இந்த பணிக்கு 2023, 2024ம் ஆண்டில் பிஇ, பிடெக் பிரிவில் மெக்கானிக்கல் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன் அல்லது ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இசிஇ அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் சைபர் செக்யூரிட்டி படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாக இன்ஜினியரிங்கை பொறுத்தவரை 60 சதவீதம் அல்லது CGPA 6.0 என்ற அளவு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு அரியர் என்பது இருக்கலாம். இருப்பினும் பணிக்கு தேர்வாவதற்குள் அதனை கிளியர் செய்ய வேண்டும். இதுதவிர விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் 60 சதவீத அல்லது அதற்கு அதிக மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளிக்கு செல்லாமல் Open School அல்லது Distance Education என்பது 10, பிளஸ் 2-வுக்கு மட்டுமே பொருந்தும்.
மாத சம்பளமாக ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் கிடைக்கும். அதன்படி பார்த்தால் மாதம் ரூ.29,166 சம்பளமாக கிடைக்கும். பணிக்கு சேர்ந்த பிறகு 6 மாதம் கழித்து போனஸாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். ஆண்டுதோறும் Increments இருக்கும். Merge Bonuses என்பது பணிக்கு சேர்ந்ததில் இருந்து 18, 24, 36வது மாதங்களில் இருக்கும்.
ஆனால் இந்த பணிக்கு 12 மாத Service Agreement என்பது உள்ளது. இதனை மீறி 12 மாதத்துக்குள் பணியை விட்டால் ரூ.75 ஆயிரம் கொடுக்க வேண்டி இருக்கும். 3 பிரிவுகளில் இண்டர்வியூ என்பது நடக்கும். முதல் ரவுண்ட்டில் ஆன்லைன் அசஸ்மெண்ட்-டில் Aptitude Test, Written Communication Test, Online Programming Test இருக்கும். இதில் Coding Test-ல் விண்ணப்பதாரர்கள் Java, C, C++ அல்லது பைத்தான் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
2வது ரவுண்ட் என்பது Business Discussion, 3வது ரவுண்ட் என்பது HR Discussion என்ற முறையில் இருக்கும். இந்த பணிக்கு டிசம்பர் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதோடு விண்ணப்பதாரர்கள் கடந்த 3 மாதத்தில் விப்ரோவில் எந்த இண்டர்வியூம் அட்டென்ட் செய்திருக்க கூடாது. அப்படி அட்டென்ட் செய்யாதவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இது ஒரு PAN INDIA வேலையாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படலாம். இதனால் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
Weather Data Source: Wettervorhersage 21 tage