டிகிரி கூட தேவையில்லை! இனி இந்த வேலைக்குத் தான் டிமாண்ட் எகிற போகுது! கூகுள் நிர்வாகியே சொல்லிட்டாரே

post-img
வாஷிங்டன்: டிகிரி கல்வி தகுதி கூட இல்லாத டேடா அனலடிக்ஸ் பணிக்கு தற்போது அதிக தேவை எழுந்துள்ளதாகவும் இத்தகைய பணிகளுக்கு வருடத்திற்கு 85 லட்சம் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் லிசா கெவல்பர் கூறியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் டேடா அனலிஸ்ட் பணிக்கான தேவை மூன்று மடங்கு அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். டெக் உலகில் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை கொண்டுள்ள நிறுவனம் கூகுள். அமெரிக்காவின் சிலிக்கான் வாலியில் இந்த நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை உள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அந்த நிறுவனத்தின் சி இ ஓவாக நியமிக்கப்பட்டார். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் தாய் நிறுவனமாக இருக்க கூடிய ஆல்பாஃபெட்டில் பணியாற்ற வேண்டும் என்பது தகவல் தொழில் நுட்பதுறையில் பணியாற்றும் பலரின் பெரும் கனவாக இருக்கும். கூகுள் நிறுவனத்தை பொறுத்தவரை தற்போது டிகிரி கல்வி தகுதி தேவைப்படாத டேடா அனலிஸ்ட் பணிக்குத்தான் அதிக டிமாண்ட் இருப்பதாகவும் இந்த வேலைக்கு மாதமே பல லட்சங்கள் வரை சம்பளம் கொடுக்கவேண்டியுள்ளதாகவும் கூகுள் நிறுவனத்தின் இணை தலைவர் லிசா கவேல்பர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “டேடாக்களை புரிந்து கொண்டு முக்கியமான வணிக முடிவுகளுக்கு வழிகாட்டி போல செயல்படும் பணியான டேடா அனலிஸ்ட் பணிக்கு அதிக தேவை உள்ளது. டேடா அனலிஸ்ட்க்ள் டிரெண்டிங்களும் அசல் தரவுகள், பகுப்பாய்வு ஆகியவற்றை உருவாக்குகிறார்கள். இந்த தரவுகள் தொழில் யுக்திகளை வடிவமைக்க பயன்படும். எக்சல், SQL, Tableau- ஆகிய டூல்ஸ்களை அடிக்கடி பயன்படுத்தி மெட்ரிக்ஸ்களை எடுக்கிறார்கள். விற்பனை அளவு, வெப்சைட் டிராபிக் போன்ற தரவுகளையும் எடுக்கிறார்கள். இத்தகைய பணிக்குத்தான் தற்போது டிமாண்ட் அதிகமாக உள்ளது. டிகிரி போன்ற கல்வித் தகுதியை விட திறன் சார்ந்த அறிவே போதுமானதாக உள்ளது. பல்வேறு ஆன்லைன் டிரெயினிங் படிப்புகளும் இதற்காக உள்ளன. குறிப்பாக கூகுளின் டேடா அனலிஸ்ட் சான்றிதழ் படிப்பு மாதம் 49 டாலருக்கே கிடைக்கிறது. ஐபிஎம், CompTIA ஆகியவைகளும் இத்தகைய படிப்புகளை வழங்குகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் டேடா அனலிஸ்ட் பணிகள் 30 சதவிதம் அளவுக்கு வளர்ச்சி பெறும் என்று அமெரிக்க தொழிலாளர் புள்ளியியல் மையம் எதிர்பார்க்கிறது. இது சராசரி வேலை வாய்ப்பு வளர்ச்சியை விட மூன்று மடங்கு அதிகம்" என்றார். எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?: டேடா அனலிஸ்ட் பணிக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவலும் மூக்கின் மேல் விரலை வைக்க வைத்துள்ளது. பிரபல ஆன்லைன் வேலை வாய்ப்பு நிறுவனமான கிளாஸ்டோர் அறிக்கையை மேற்கோள் காட்டி இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, எண்ட்ரி லெவலில் 93 ஆயிரம் டாலரும், தொழி முறை டேடா அனலிஸ்ட்கள் 1,10,000 டாலர் வருடத்திற்கு சம்பளம் பெற முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், உற்பத்தி, சுகாதாரம்,டெக், பைனான்ஸ் போன்ற ரிமோட் ரோல்களுக்கு ஆண்டுக்கு 1,50,000 டாலருக்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளதாம். ரூபாய் மதிப்பில் சொல்வது என்றால் ரூ.85 லட்சத்திற்கு மேல் ஆண்டுக்கு வருமானம் ஈட்ட முடியும். நெட்டிசன்கள் கருத்து: டேடா அனலிடிக்ஸ் ஜாப்ஸ், டேடா அனலிடிக்ஸ் திறன் போன்ற பணிகள் குறித்தும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கூகுளில் தேடல் அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் இது தொடர்பாக கூறுகையில், உடனே ஒரு விண்ணப்பத்தை போட்டுற வேண்டியதுதான் எனவும், இதெல்லாம் உண்மையான என யோசிக்க வைப்பதாக உள்ளது எனவும் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சில நெட்டிசன்கள் கூறுகையில், எவ்வளவு படிக்கிறோம் என்பதை விட எந்த அளவு திறன் வாய்ந்தவராக இருக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

Related Post