Zerodha உடன் மோதும் போன்பே.. பங்கு சந்தை முதலீட்டுக்கு புதிய ஆப் 'Share.Market'..!

post-img

உலகின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் நேரடியாக இறங்க முடியாத காரணத்தால் பெரும் தொகைக்கு பிளிப்கார்ட் நிறுவனத்தை கைப்பற்றியது. இந்த கைப்பற்றலில் பிளிப்கார்ட் ஈகாமர்ஸ் கட்டமைப்புக்குள் குட்டியாக ஒளிந்துக்கொண்டு இருந்து போன்பே தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

போன்பே மாபெரும் திட்டத்துடன் பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து தனியாக பிரிந்து, சிங்கப்பூரில் இருந்த நிறுவனம் இந்தியாவிற்கு மாற்றப்பட்டு புதிய பாதையை அமைக்க துவங்கியது. பேமெண்ட் மற்றும் இதர நிதியியல் சேவை பிரிவில் மட்டுமே இருந்த போன்பே 2023 ஆம் ஆண்டில் ONDC சேவை பிரிவான pincode தளத்தை அறிமுகம் செய்தது.

தற்போது போன்பே அடுத்தகட்டமாக இந்திய மக்களுக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வாய்ப்பையும், அதற்கான சேவையையும் அளிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டார் ப்ரோகிங் வர்த்தகத்தை துவங்கியுள்ளது. இதற்காக Share.Market என்ற தனியொரு செயலியை உருவாக்கியுள்ளது.

போன்பே நிறுவனத்தின் புதிய Share.Market ஆப் மூலம் இந்திய மக்கள் பங்குகள், மியூச்சவல் பண்ட், ETF ஆகியவற்றை வாங்க விற்கும் வாய்ப்பை வழங்குகிறது. இது கிட்டத்தட்ட நாட்டின் முன்னணி ஸ்டாக் ப்ரோகிங் தளங்களான Zerodha, groww போன்றவற்றுடன் போட்டிப்போட்டு வருகிறது.

இதுகுறித்து போன்பே நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனர் சமீர் நிகாம் பேசுகையில் சமீபத்தில் போன்பே தளத்தில் கடன், இன்சூரன்ஸ், பேமெண்ட் கேட்வே சேவைகளை அறிமுகம் செய்தோம், 4 வருடங்களுக்கு முன்பு மியூச்சுவல் பண்ட் டிஸ்ட்ரிபியூஷன் வர்த்தகத்தை துவங்கினோம், தற்போது ஸ்டார் ப்ரோகிங் வர்த்தகத்தை துவங்கி இதற்காக Share.Market என்ற செயலியை அறிமுகம் செய்ய உள்ளோம் என தெரிவித்தார்.

Share.Market செயலி மற்றும் அதன் வர்த்தகம் போன்பே வெல்த் பிரிவின் கிளை நிறுவனமாக இருக்கும் எனவும் சமீர் நிகாம் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டு போன்பே 2 வெல்த்டெஸ்க் தளத்தை கைப்பற்றியது, WealthDesk மற்றும் OpenQ ஆகியவற்றை 70 மில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டு கைப்பற்றப்பட்டது.

Zerodha ஏற்கனவே பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருக்கும் வேளையில் சமீபத்தில் மியூச்சவல் பண்ட் முதலீட்டு துறையில் இறங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் போன்பே பேமெண்ட் சேவையை தாண்டி தனது நிதியியல் சேவை வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு மியூச்சுவல் பண்ட், ஸ்டாக் ப்ரோகிங் சேவைகளை வழங்கி வருகிறது.

Related Post