சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனம் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 21ம் தேதி நடக்கும் ஆன்லைன் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS or Tata Consultancy Services) சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி வருகிறது.
அதன்படி இப்போது வெளியாகி உள்ள புதிய வேலைவாய்ப்பு குறித்த விபரம் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் IBM AS/400 Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதாவது iSeries/As400/RPG புரோகிராமிங்கில் 3 முதல் 10 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் RPG, RPGLE, CLP, CLLE, SQL, SQRPGLE மற்றும் DB2 உள்ளிட்டவற்றை நன்கு கற்று தேர்ந்தவராக இருக்க வேண்டும்.
மேலும் Agile உள்பட புதிய சாப்ட்வேர் டெவலப்மென்ட் மெத்தடாலஜியில் அனுபவம் இருக்க வேண்டும். வெப் சீரிஸ் மற்றும் இன்டிகிரேஷன் டெக்னாலஜி பற்றிய அறிவு இருக்க வேண்டும். RPGLE,CLLE, SQLRPGLE உள்ளிட்டவற்றை வைத்து Code எழுத தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் அப்ளிகேஷன் டிசைன் மற்றும் டெக்னிக்கல் ஸ்பெஷிபிகேஷன்களுக்காக Code டிரான்ஸ்லேட் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் மாதம் அல்லது ஆண்டு சம்பளம் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பித்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான இண்டர்வியூ என்பது டிசம்பர் 21ம் தேதி ஆன்லைனில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர், ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here