சென்னை: பிரபல நிறுவனத்தில் வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தொடக்கத்திலேயே ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. அதன்படி மாதம் ரூ.33,333 சம்பளமாக கிடைக்கும். இதற்கு டிகிரி முடிக்காதவர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம்.
SAZ India என்பது நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் ஐடி உள்பட பிற தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை Recruitment செய்து வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய பணி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி SAZ India எனும் நிறுவனத்தில் தற்போது டேட்டா அனலிஸ்ட் டிரெய்னி (Data Analyst Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், புள்ளியில், எக்கனாமிக்ஸ் அல்லது தொடர்புடைய துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் இது கட்டாயமில்லை. அதாவது ஒருவேளை டிகிரி முடிக்காமல் இருந்தால் கூட குறிப்பிட்ட திறமை இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம்.
அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு ஸ்ட்ராங்க் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். டேட்டா சார்ந்த பணி செய்ய ஆர்வமாக இருக்க வேண்டும். மைக்ரோசாப்ட் எக்ஸல் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக Advanced Functions, Pivot Tables உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் எஸ்க்யூஎல் மற்றும் database querying தெரிந்து வைத்திருப்பதோடு, டேட்டா விசுவலேசேஷன் டூல்ஸ்களான Power BI, Tableau உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். புரோகிராமிங் லேங்குவேஜ்களான பைத்தான் அல்லது R தெரிந்திருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதன்படி பார்த்தால் மாதம் 33,333 வரை சம்பளமாக கிடைக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Remote முறையில் வேலை செய்யலாம். அதாவது அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் SAZ India நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம் என்பதால் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here