இந்திய கடலோர காவல் படையில் காலிப்பணியிடங்கள்.. 56 ஆயிரம் சம்பளம்.. தேதி முடிய போகுது! அப்ளை பண்ணுங்க

post-img
சென்னை: இந்திய கடலோர காவல் படையில் 145 அசிஸ்டண்ட் கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும். கடந்த 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய கடலோர காவல் படை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கடலோர காவல் படையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 145 அசிஸ்டண்ட் கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கே பார்க்கலாம். காலிப் பணியிடங்கள்: மொத்தம் 140 அசிஸ்டண்ட் கமாண்டண்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பொதுப்பணி (ஜிடி) - 110 பணியிடங்களும், டெக்னிக்கல் பிரிவில் 30 பணியிடங்களும் என மொத்தம் 140 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஜிடி எனப்படும் பொதுப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவினை எடுத்து படித்து இருக்க வேண்டும். பட்டப்படிப்புக்கு இணையான டிப்ளமோ முடித்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். டெக்னிக்கல் பணியிடங்களுக்கு என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேஷன் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகளை படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை, ஜிடி எனப்படும் பொதுப்பணி மற்றும் டெக்னிக்கல் ஆகிய 2 பணியிடங்களுக்குமே 21 வயது முதல் 25 வயது உடையவர்கள் விண்ணபிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. சம்பளம் எவ்வளவு?: பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.56,100 வழங்கப்படும். தேர்வு முறை: ஆன்லைன் வழியாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வானது, கடலோர காவல் படையின் பொது நுழைவுத்தேர்வு (CGCAT) முதலில் நடைபெறும். தொடர்ந்து, ஸ்டேஜ் 2 முதன்மை செலக்சன் போர்டு (பிஎஸ்பி), ஸ்டேஜ் 3 இறுதி செலக்சன் போர்டு, ஸ்டேஜ் 4 மெடிக்கல் தேர்வு, ஸ்டேஜ் 5 induction என 5 கட்ட தேர்வு நடைமுறைகளுக்குப் பிறகு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்களை பொறுத்தவரை நொய்டா, மும்பை / கோவா, சென்னை, கொல்கத்தா, ஷில்லாங் மற்றும் காந்தி நகர் ஆகிய நகரங்களில் நடைபெறும். விண்ணப்பக் கட்டணம்: ஆன்லைன் மூலமாக் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்னப்ப கடண்ணம் ரூ. 300 ஆகும். எஸ்டி/ எஸ்.சி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.12.2024. இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்துவிடவும். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://joinindiancoastguard.cdac.in/cgcat/- இந்த லிங்கை கிளிக் பண்ணவும்.

Related Post