இப்படி டெல்லி ஐஐடி கல்லூரியை சேர்ந்த மாணவிகள் மாடுகளை விற்பனை செய்ய ஈகாமர்ஸ் தளத்தை உருவாக்கியுள்ளனர். Animall என்னும் பெயருடன் உருவாக்கப்பட்டு உள்ள இந்த ஈகாமர்ஸ் தளத்தில் மாடுகளை வாங்கவும், விற்பனை செய்யவும் முடியும். Animall தளத்தை அறிமுகம் செய்த சில மாதங்களிலேயே அதிகப்படியான வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது கோடி கணக்கில் வருவாய் பெற்று வருகிறது.
Animall தளத்தை அனுராக் பிசோய், கிர்த்தி ஜங்ரா, லிபின் வி பாபு மற்றும் நீது ஒய் ஆகியோர் இணைந்து நிறுவினர். பால் விற்பனையாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இலக்குடன் கால்நடை வர்த்தகம் மற்றும் டெய்ரி வர்த்தகத்தை லாபகரமாக மாற்றவும் இந்த தளத்தை உருவாக்கியுள்ளதாக கூறுகின்றனர்.
RoC இல் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் அடிப்படையில், Animall ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் வருவாய் அளவு FY21 இலிருந்து FY22 வரையில் 148 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் இத்தளத்தில் செயல்பாட்டு வருவாய் 2021 ஆம் நிதியாண்யில் வெறும் 5 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் 2022 ஆம் நிதியாண்டில் 7.4 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் Animall தளத்தின் வருவாய் தற்போது 565 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என ஸ்டார்ட்அப் பீடியா தெரிவித்துள்ளது. Animall தளத்தில் மாடுகளை வாங்குவது விற்பனை சேவை மட்டும் அல்லாமல் மாடுகளுக்கான பல்வேறு ஹெல்த்கேர் சேவைகளும் வழங்கப்படுகிறது.
Animall தளம் இதுவரையில் சுமார் 170 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈட்டியுள்ளது. இந்நிறுவனத்தில் Beenext, Sequoia, Nexus Ventures போன்ற முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது.