நோ எக்ஸாம்.. டிகிரி போதும்! தமிழ்நாடு வனத்துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு..!

post-img

தஞ்சாவூர்: தமிழ்நாடு வனத்துறையில் தஞ்சாவூர் வனக்கோட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி படித்து முடித்தவர்கள் இந்த பணிக்கு வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.


தமிழ்நாடு வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் மாவட்டங்கள் வாரியாக நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போது தஞ்சாவூர் வனக்கோட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:

 TN forest department recruitment for Technical Assistant and Data Entry Operator in Thanjavur

தஞ்சாவூர் வனக்கோட்டத்தில் தற்போது தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) மற்றும் தரவு நுழைவு இயக்குபவர் (Data Entry Operator) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சி வனவியல்/வேளாண்மை அல்லது எம்எஸ்சி வனவிலங்கு உயிரியல், லைப் சயின்ஸ், தாவரவியல், விலங்கியல், நேச்சுரல் சயின்ஸ் அல்லது அதற்கு இணையான 2 ஆண்டு அனுபவம் கொண்ட கள ஆராய்ச்சி செய்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் எம்சிஏ அல்லது அதற்கு சமமான எம்ஐஎஸ்/ஜிஐஎஸ் 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர தமிழ்நாடு வனத்துறையின் பணியாளர்கள் தர ஊதியம் ரூ.4,800 மற்றும் அதற்கு மேலான அனுபவத்துடன் ஒய்வு பெற்றவர்களும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

TN forest department recruitment for Technical Assistant and Data Entry Operator in Thanjavur

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் டிப்ளமோ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பட்டம்/டிப்ளமோ படிப்புடன் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பயன்பாடுகளில் சான்றிதழுடன் முடித்து 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அல்லது தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பிரிவில் சான்று பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூன் மாதம் 26ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை ‛‛மாவட்ட வனஅலுவலர், மாவட்ட வன அலுவலகம், பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் - 613 403, தொலைபேசி எண் 04362 - 264669, Email ID: dfotnj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. தற்போதைய இந்த அறிவிப்பின் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவரும், டேட்டா என்டரி ஆபரேட்டர் பணிக்கும் ஒருவர் என மொத்தம் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இருப்பினும் இது ஒரு தற்காலிக பணியாகும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post