நிர்வாகம்: தேசிய கைத்தறி மேம்பாட்டு கழகம் (National Handloom Development Corporation Ltd)
மேலாண்மை: மத்திய அரசு
பதவிகள் விவரம்
Ø Company Secretary
Ø Sr. Manager (F&A)
Ø Junior Officer
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.05.2023
பணியிடங்கள் எண்ணிக்கை: 14
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பதவிக்கு ஏற்றவாறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். எனினும் அதிகப்பட்ச வயது வரம்பு 45.
ஊதியம்/கல்வி தகுதி
ஜூனியர் ஆபிசர் பதவிக்கு மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
நிமிடத்துக்கு ஆங்கிலத்தில் 40 வார்த்தை டைப் செய்யும் வகையில் திறமையை பெற்றிருத்தல் அவசியம். கம்ப்யூட்டர் பயன்படுத்தவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஹிந்தி டைப் ரைட்டிங் தெரிந்திருந்தாலும் கூடுதல் சிறப்பு. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு, மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
சீனியர் மேனேஜர் பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். பணிக்கு சார்டர்ட் அக்கவுண்டன்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
12 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 45 வயதுக்குள் இருப்பவர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களக்கு, மாதம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
கம்பெனி செயலாளர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். சட்டப்படிப்பை முடித்திருப்பதோடு, எட்டு ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.60 லட்சம் வரை வழங்கப்படும்.
ப்ளீஸ் நோட் இட்...!
ஆன்லைன் வாயிலாக விண்ணப்பத்தை, 15.05.2023 அன்று இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க இயலும். பின்னர், அச்சேவை நிறுத்தப்படும்.
விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல், டைப்ரைட்டிங் திறமை மற்றும் குழு கலந்துரையாடல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் https://www.nhdc.org.in/PostApply.aspx ஆகிய தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களின் புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்து கொள்ளுங்கள்.
கல்வி மற்றும் பிற சான்றிதழ்களை கையில் வைத்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும்.