சென்னை: இந்தியன் ரயில்வேயில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம் மற்றும் இதர ரயில்வே சம்மந்தப்பட்ட இடங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், நூலகர், ஆய்வக உதவியாளார் உள்பட 1036 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு என்ன போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்ஆர்பி நிரப்பி வருகிறது. காலிப்பணியிடங்கள், பணியின் தன்மைக்கேற்ப உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. அந்த வகையில் தற்போது ரயில்வே அமைச்சகம் மற்றும் இதர ரயில்வே சம்மந்தப்பட்ட இடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன போன்ற விவரங்களை இங்கே காணலாம்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT): 187
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (TGT): 338
அறிவியல் மேற்பார்வையாளர் : 03
தலைமை சட்ட உதவியாளர்: 54
அரசு வழக்கறிஞர்: 20
உடல் பயிற்சி பயிற்றுவிப்பாளர் (PTI) - 18
அறிவியல் உதவியாளர் / பயிற்சி: 02
ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் இந்தி: 130
மூத்த விளம்பர ஆய்வாளர்: 03
ஊழியர்கள் மற்றும் நல ஆய்வாளர்: 59
நூலகர்: 10
இசை ஆசிரியர் (பெண்): 03
முதன்மை ரயில்வே ஆசிரியர்: 188
உதவி ஆசிரியர் (பெண் ஜூனியர் பள்ளி): 02
ஆய்வக உதவியாளர் / பள்ளி: 07
ஆய்வக உதவியாளர் (வேதியியல் மற்றும் உலோகவியல் ): 12
என மொத்தம் 1036 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வி தகுதி மாறுபடும். அதாவது பணியிடங்களின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி வேறுபடும். ஆசிரியர் பணியிடங்களுக்கு துறைசார்ந்த பிரிவில் பட்டப்படிப்புடன் பி எட் படித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 48 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் டிரன்ஸ்லேட்டர், சீனியர் விளம்பர ஆய்வாளர், ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 36 ஆகும். ஊழியர் நல ஆய்வாளர் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு33 ஆகும்.
கணிணி வழி ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: ஜனவரி 07 ஆம் தேதி. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் பிப்ரவரி 06. 2025 ஆகும்.
ரூ.500. எஸ்,சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் ஆகும்.
தேர்வு அறிவிப்பு இன்னும் ஆர்.ஆர்.பி இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விரைவில் இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிபார்க்கப்படுகிறது. எனவே விண்ணப்பதாரர்கள் பணியிடங்கள் விவரம், கல்வி தகுதி, விண்ணப்பிக்க அவகாசம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள அவ்வப்போது ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது செக் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.