TCS-ன் 10 வருட ஒப்பந்தம் திடீர் முறிவு.. டிசிஎஸ் ஊழியர்கள் நிலை என்ன?

post-img

டிசிஎஸ் நிறுவனம் 2017ல் Transamerica Life Insurance நிறுவனத்துடன் சுமார் 10 வருடம் கொண்ட மாபெரும் ஐடி சேவை ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் தற்போது மோசமான பொருளாதார காரணமாக முன்கூட்டியே முறிக்கப்படுவதாக டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2017ல் நடந்த டிசிஎஸ் மற்றும் டிரான்ஸ்அமெரிக்கா லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் மத்தியிலான ஒப்பந்தத்தின் மதிப்பு 2 பில்லியன் டாலராகும். இந்த ஒப்பந்த முறிவின் மூலம் இந்த மாபெரும் ஐடி சேவை திட்டத்தில் பணியாற்றியவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுக்குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தற்போதைய மேக்ரோ பொருளாதாரம் மற்றும் வர்த்தக முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு டிரான்ஸ்அமெரிக்கா - டிசிஎஸ் மத்தியிலான ஒப்பந்தம் இரு தரப்பிலும் ஒப்புக்கொண்டு 10 வருட ஒப்பந்தம் 6 வருடத்திற்குள் முறிக்கப்பட்டு உள்ளது.

TCS says K Krithivasan to take over as new CEO and MD from June 1, 2023 -  BusinessToday

டிசிஎஸ் நிறுவனத்தின் தரவுகள் படி டிசிஎஸ் மற்றும் டிரான்ஸ்அமெரிக்கா ஒப்பந்தம் படி வருடத்திற்கு சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான வருவாய் ஒவ்வொரு வருடத்திற்கு வரும் என கணிக்கப்பட்டது. தற்போது இந்த ஒப்பந்த முறிவு மூலம் 200 மில்லியன் டாலர் அளவிலான வருவாய் பாதிக்கும்.

மேலும் டிரான்ஸ்அமெரிக்கா லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் திட்டத்தில் பணியாற்றியவர்கள், குறிப்பாக வெளிநாட்டில் பணியாற்றியவர்களின் நிலை என்ன..? இவர்களுக்கு மாற்று ப்ராஜெக்ட்-க்கு மாற்றப்பட்டு உள்ளனாரா..? அல்லது ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்களா..?


ஜூன் 1 ஆம் தேதி தான் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக கே கிருதிவாசன் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றியுள்ளார். வெறும் 15 நாளில் மாபெரும் வருவாய் திட்டத்தை இழந்துள்ளார், டிரான்ஸ்அமெரிக்கா லைப் இன்சூரன்ஸ் ஒப்பந்தம் டிசிஎஸ் BFSI பிரிவின் கீழ் செய்யப்பட்டிருக்க வேண்டும், இப்பிரிவின் முன்னாள் தலைவராக இருந்தவரும் கே கிருதிவாசன் தான்.


Related Post