கோவை பேரூர் பட்டீசுவரசுவாமி கோவிலில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை.. 58600 ரூபாய் வரை சம்பளம்

post-img

கோவை: கோவை மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனை எழுத்தர், பதிவறை எழுத்தர், துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்ளுக்கு தகுதி வாய்ந்த இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு படித்தவர்கள், எழுத படிக்க தெரிந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
கோவை மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "கோவை மாவட்டம், பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் கீழ்க்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 03.01.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்குப்பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இதர விவரங்களை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் வந்து கேட்டுத் தெரிந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. திருக்கோயில் இணையத்தளத்தில் (www.hrce.tn.gov.in மற்றும் https://perurpatteeswarar.hrce.tn.gov.in)-ல் தெரிந்து கொள்ளலாம்.

இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனை எழுத்தர், பதிவறை எழுத்தர், துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்கள் உள்ளன. மொத்தம் ஐந்து பணியிடங்கள் காலியாக உள்ளன
இளநிலை உதவியாளர்: 2 காலி பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும். ஊதியம்: Level 22 18500 58600
சீட்டு விற்பனை எழுத்தர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும். ஊதியம்: Level 22 18500 58600

பதிவறை எழுத்தர்: ஊதியம் 15900 - 50400 | பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
துப்புரவு பணியாளர் : ஊதியம் 10000 -31500 தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
நிபந்தனைகள்
1. விண்ணப்பதாரர் 01.07.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
2. இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
3. விண்ணப்பதாரர் நல்லதேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும். தொற்றுநோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

4. அதேபோல் (i) நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள்
(ii) பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள்
(ii) அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் இதர திருக்கோயில்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள்.
(iv) திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள்.
(v) இத்துறைக்கு நிலுவைத்தொகை செலுத்தவேண்டியவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர்.
5. நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
6. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும் 03.01.2025-ம் தேதி மாலை 5.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
7. விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
8. விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்படவேண்டும்.
9. வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
10.நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளுக்குட்பட்டவை.
11.விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்தும் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை அனுப்பக் கூடாது. 12.ராஜீஹத்தாலும், தெய்வீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
13.இத்திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை ரூ. 100/- செலுத்தி விண்ணப்ப படிவம் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
14.விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், பேரூர் வட்டம், கோவை மாவட்டம் -641010" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Post