டெல்லி: நாட்டின் மிக உயரிய நீதித்துறை அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 241 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான மேலும் விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
நாட்டின் மிக உயரிய நீத்துறை அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் 241 ஜூனியர் கோர்ட் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.
241 ஜூனியர் கோர்ட் உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
கல்வித்தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் டைப் ரைட்டர் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அடிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஜூனியர் கோர்ட் உதவியாளர் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
ஜூனியர் கோர்ட் உதவியாளர் பணியில் சேர்பவர்களுக்கு மாதம் ரூ. 72,040 வழங்கப்படும்.
எழுத்து தேர்வு, திறன் சோதனைக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும்.
ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் எவ்வளவு, விண்ணப்பிக்கும் தேதி உள்ளிட்ட விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.sci.gov.in/