சென்னை மெட்ரோ ரயிலில் என்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது வரை 42 மெட்ரோ ரயில்கள் உள்ளன. இந்த ரயில் சேவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.
சென்னை மெட்ரோவின் முதல் இருப்பு வழி பாதை வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரை உள்ளது. இரண்டாம் இருப்பு வழி பாதை சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரை உள்ளது. இதற்கான அலுவலகம் சென்னை கோயம்பேடு அருகே உள்ளது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் துணை பொது மேலாளர், மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு B.E./B.Tech/M.E./ M.Tech ஆகிய பிரிவுகளில் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கான மாத ஊதியம் ரூ 80 ஆயிரம் ஆகும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியாகும். அரசாணை பிறப்பிப்பு துணை பொது மேலாளர் பதவிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்த பணிக்கு எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் படித்திருக்க வேண்டும்.
அது போல் மேனேஜர் பதவிக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கும் எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் படித்திருக்க வேண்டும். மேனேஜர் (சுற்றுச்சூழல் ) பணிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. துணை மேலாளர் பதவிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது. இதற்கும் எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் படித்திருக்க வேண்டும்.
இது போல் உதவி மேலாளர் பணிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இதற்கும் எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் படித்திருக்க வேண்டும். உதவி மேலாளர் (சுற்றுச்சூழல்) பதவிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்த பதவிகளுக்கு ரூ 80 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும், விண்ணப்பிப்போரின் வயது வரம்பு அதிகபட்சமாக 38 இருக்க வேண்டும்.
இதில் துணை மேலாளர், உதவி மேலாளர் பணிகளுக்கு மாதம் ரூ 70 ஆயிரம் ஊதியமும் உதவி மேலாளர் (சுற்றுச்சூழல்) மாதம் ரூ 60 ஆயிரமும் ஊதியம் வழங்கப்படுகிறது. இதில் துணை மேலாளர், உதவி மேலாளர் பணிகளுக்கு 4 ஆண்டுகள் முன் அனுபவமும் 35 வயதும் இருத்தல் வேண்டும். உதவி மேலாளர் (சுற்றுச்சூழல்) பதவிக்கு 2 ஆண்டுகள் அனுபவமும் 30 வயது இருத்தல் வேண்டும்.
இந்த பணிகள் அனைத்து ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CONDEP-10-2023-Website-Final.pdf என்ற இணையதளத்தில் போய் பார்க்கவும்.