சென்னை: ஜெனரல் இன்ஸ்சுரன்ஸ் காப்பரேஷன்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 110 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.96 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று ஜெனரல் இன்ஸூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா. இந்த காப்பீட்டு நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. பொதுத்துறை நிறுவனம் என்பதால் கை நிறைய சம்பளம் + சலுகைகள் உள்ளிட்டவை இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கிடைக்கும்.
இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
உதவி மேலாளர் (பொது) -18
லீகல் - 09
மனித வளம் (HR)- 06
என்ஜினியரிங் - 05 (மரைன் -1, ஏரோநெட்டிக்கல் -1, மெக்கானிக்கல் -1, சிவில் -1, எலக்ட்ரிக்கல் -1)
ஐடி - 22
காப்பீட்டு தொகை கணக்கிடுபவர் (Actuary)-02
காப்பீடு - 20
மெடிக்கல் - 02
நிதி - 18
கல்வி தகுதி: உதவி மேலாளர்(பொது) பணிக்கு எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 60% மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 50% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். அனைத்து பணியிடங்களுக்கும் துறை சார்ந்த பிரிவில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். அதாவது சட்டம் (உதவி மேலாளர்) பணிக்கு இளங்கலை பட்டம் முடித்து இருக்க வேண்டும். பார் கவுன்சிலில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
மனித வளம் பணிக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்புடன் HRM / பணியாளர் மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி அவசியம். டெக்னிக்கல் சார்ந்த பணியிடங்களுக்கு தொழில் நுட்ப படிப்புகள் முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை ரூ.50,925 - 96,765 வரை கிடைக்கும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, குரூப் டிஸ்கசன், நேர்முகத்தேர்வு, மெடிக்கல் பரிசோதனை அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. பிற பிரிவினருக்கு ரூ.1,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வரும் 19.12.2024 கடைசி நாளாகும். ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 05.01.2025 (தோராயமானது). தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதரர்கள் https://www.gicre.in/en/ என்ற இணையதளம் வாயிலாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.gicre.in/en/people-resources/career-en
Weather Data Source: Wettervorhersage 21 tage