332 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் ஜூலை.2க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது. மறக்காதீங்க, இப்பணியிடங்கள் தற்காலிகமானது.
நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (Medical Services Recruitment Board(MRB)
மேலாண்மை : மாநில அரசு
காலிப்பணியிடம் எண்ணிக்கை: 332
பணி விவரம் · ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (Laboratory Technician- Grade III)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 02.07.2023
கல்வி தகுதி
10+2 என்ற வகையில் பள்ளிக் கல்வி பயின்றிருக்க வேண்டும்.Occupational Therapy துறையில், மூன்று ஆண்டு இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், நான்கு ஆண்டு Occupational Therapy துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கல்வி தகுதியுடன் ஆறு மாத பயிற்சியையும் பெற்றிருக்க வேண்டும் (internship)
ஊதியம் தொகுப்பூதியமாக, ரூ.13 ஆயிரம் மாத ஊதியம் என்ற முறையில் வழங்கப்படும். ஆண்டுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும். இரண்டு ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பின், இப்பணியிடங்களில் காலிப்பணியிடம் உருவாகும் பட்சத்தில், நிரந்த பணியாளர் பெறும் ஊதியமான மாதம் ரூ.19,500 - 62,000 வரை பெறுவர்.
வயது வரம்பு
விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 18 முதல் 32 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வு, சலுகை உள்ளிட்ட இன்ன பிற விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.
விண்ணப்ப கட்டணம் SC/SCA/ST/DAP(PH) விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300; மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.600 என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை; பத்தாம் வகுப்பு 12ம் வகுப்பு, சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20% க்கும், 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும்.
இதற்கு எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு கிடையாது. விண்ணப்பிக்க, https://www.mrb.tn.gov.in/index.php என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற வழி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். Ø முகப்புப் பக்கத்தில் Online Registration என்பதை 'க்ளிக் செய்யவும்.
Laboratory Technician Grade-III என்ற பதவியை 'க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரி கட்டாயமாகும்.
அனைத்துத் தகவல்களும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் வாயிலாக மட்டுமே பகிரப்படும்.
வண்ணப் புகைப்படம் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து ஆகியவற்றையும் தேர்வர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயம்.
கேட்கப்பெற்ற உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனில், விண்ணப்பம் முழுமை பெற்றதாக கருதப்படாது.
காலிப் பணியிடங்கள் முழுவதும் கல்வி தகுதி அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. கிளிக் பண்ணுங்க.... https://www.mrb.tn.gov.in/