சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் டிசம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 18 ம் தேதி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி தற்போதைய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
எச்சிஎல் நிறுவனம் சார்பில் Walkin INterview Financial Crime Operations & QA in Fincrime என்ற பெயரில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அனலிஸ்ட் & சீனியர் அனலிஸ்ட் பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யபப்ட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்து குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதன்படி Financial Crime Operations பணிக்கு 2 முதல் 3 ஆண்டு வரை Due Diligence, Enhanced due Diligence மற்றும் Reviewing suspicious account activity பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும். அதேபோல் KYC, AML, CDD கொள்கைகள் மற்றும் பயிற்சி பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும்.
அதேபோல் QA in Fincrime பணிக்கு எண்ட் டூ எண்ட் பைனான்சியல் கிரைம் பேக்எண்ட் ஆபரேஷன்ஸ் மற்றும் குவாலிட்டி அசூரன்ஸ் மேனேஜ்மென்ட், எக்ஸல், பவர் பிஐ பயன்படுத்தும் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். அதேபோல் கேஒய்சி, டிரான்ஸக்சன் மானிட்டரிங், பிஇபி ரிவ்யூ, ஓடிடி ரிவ்யூ-வில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் AMLD/OFAC/FATF உள்ளிட்டவை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பதுடிசம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 18 ம் தேதி வரை மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க நினைப்பவர்கள் HCL Technologies Ltd. ETA 1- Techno Park, Special Economic Zone, 33, Rajiv Gandhi Salai, Navallur Village and Panchayat, Thiruporur Panchayat Union, Navallur, Tamil Nadu 603103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது HCL Tech, 2nd Floor, New Cafe(Round Cafeteria),Elcot Sez, Sholinganallur, Chennai, Tamil Nadu - 600 119 என்ற முகவரியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவுக்கு செல்போர் அப்டேட்டட் ரெஸ்யூம், அரசு வழங்கிய ஏதேனும் ஒரு ஐடி கார்டு உள்ளிட்டவற்றை இண்டர்வியூவுக்கு எடுத்து செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here