சென்னை: ஐடி வேலை பலருக்கும் விருப்பமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தான் பிகாம், பிஏ, பிபிஏ உள்ளிட்ட டிகிரி முடித்து பணி முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு பயிற்சியுடன் தொடக்கத்திலேயே ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சம்பளம் + போனஸ் கிடைக்கும் வகையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.
Recruit CRM என்பது ஐடி துறையில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஐடி நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் Recruit CRM நிறுவனத்தில் இருந்து வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
Recruit CRM நிறுவனத்தில் தற்போது கஸ்டமர் சக்சஸ் (Customer Success Fresher) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 2025/2024ம் ஆண்டில் டிகிரி முடிப்பவர்கள்/ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாக பிகாம், பிஏ, பிபிஏ, எம்காம், எம்ஏ, எம்பிஏ உள்ளிட்ட பிரிவுகளில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பம் செய்லாம். அதோடு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் SaaS Industry பற்றிய அடிப்படை புரிதல் இருக்க வேண்டும். பிரச்சனைகளைதீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்சும் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு முதல் 6 மாதம் இன்டர்ன்ஷிப் முறையில் பயிற்சி என்பது வழங்கப்படும். இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு பணி என்பது வழங்கப்படும். பயிற்சி காலத்தில் Stipend முறையில் 6 மாதம் வரை மாதம் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். இந்த காலக்கட்டத்தில் வாரத்துக்கு 42.5 மணிநேரம் அதாவது ஒரு நாளுக்கு எட்டரை மணிநேரம் வரை பணி செய்ய வேண்டிருக்கும்.
பயிற்சிக்கு பிறகு பணிக்கு தேர்வாகும்போது ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சம்பளம் (Base Salary + பெர்மாமன்ஸ் பே ரூ.1 லட்சம் Quartely) வழங்கப்படும். அதேபோல் அமெரிக்கா ஷிப்ட்டில் பணியாற்றுவோருக்கு அலோவன்ஸ் என்பது வழங்கப்படும். இதுதவிற போனஸ் என்பது வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி மொத்தம் 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் RecruitCRM நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு Virtual முறையில் Online Test(MCQ), Assignments உள்பட பிற இண்டர்வியூக்கள் நடக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.
இதுதொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் divyag@recruitcrm.io என்பதை தொடர்பு கொண்டு தீர்த்து கொள்ளலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். இதனால் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here