இந்தியாவில் ஷாட் வீடியோ பொழுதுபோக்கு துறையில் டிக்டாக் முதல் பல முன்னணி நிறுவனங்கள் கொடிக்கட்டி பிறந்தது, இதில் முக்கியமாக டிக்டாக் வெளியேற்றத்திற்கு பின்பு இப்பிரிவின் வர்த்தகம் தொடர்ந்து மோசமாகி வரும் வேளையில் புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமல் யூடியூப், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆதிக்கத்தின் வாயிலாக வாடிக்கையாளர்களையும் இழந்து வருகிறது.
இந்த நிலையில் ஷாட் வீடியோ தளத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இகுக்கும் Chingari, தனது நிறுவனர் சில வாரங்களுக்கு முன்பு வெளியேறிய கையோடு தற்போது நிறுவனத்தில் மறுசீரமைப்பு பணிகள் அடிப்படையில் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
Chingari நிறுவனத்தின் சுமார் 240 ஊழியர்கள் பணியாற்றி வரும் வேளையில் தற்போது 20 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் மூலம் சுமார் 48 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஜூன் 19 ஆம் தேதி மாலை Chingari நிறுவனத்தின் HR அணியில் இருந்து பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த பணிநீக்கத்தை Chingari நிறுவனத்தில் பெரும்பாலான அணிகளின் ஊழியர்கள் எதிர்கொண்டு இருந்தாலும், டெக் ஊழியர்கள் தான் இந்த பணிநீக்க சுற்றில் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 2 மாத சம்பளத்தை severance pay ஆக கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 மாதத்திற்கான ஹெல்த் இன்சூரன்ஸ் அளிக்கப்பட்டு உள்ளது.
2018ல் ஆதித்ய கோத்தாரி, பிஸ்வத்மா நாயக், தீபக் சால்வி மற்றும் கோஷ் ஆகியோர் இணைந்து Chingari செயலியை உருவாக்கினர். ஷாட் வீடியோ தளம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த நேரத்தில் Chingari கொடிக்கட்டி பறந்தது, இதன் மூலம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் ஐக்கிய அரபு நாடுகள், இந்தோனேஷியா, துருக்கி, அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு வரிவடைந்தது.
Chingari இந்த வெற்றியின் வாயிலாகவே GARI என்னும் கரிப்டோகரன்சி டோக்கனை உருவாக்கியது. இத்தளத்தில் உருவாக்கப்படும் வீடியோவை வைத்து பிளாக்செயின் தொழில்நுட்ப உதவியுடன் சம்பளம் சம்பாதிக்கும் வழியை Chingari தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தது. ஆனால் தற்போது கிரிப்டோ, ஷாட் வீடியோ ஆகிய இரண்டும் தோல்வி அடைந்த நிலையில் Chingari 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.