எழுத்து தேர்வு இல்லாமல் ஐ.சி.எஃப்.,ல் பணி?

post-img

எழுத்து தேர்வு இல்லாத இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 1 முதல் 3 ஆண்டுகள் பயிற்சி பெறுவர்.

 

நிர்வாகம் : ஐ.சி.எஃப்., சென்னை(ICF, Chennai)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : அப்ரண்டிஸ்

மொத்த காலிப் பணியிடங்கள் : 782

எழுத்து தேர்வு இல்லாத பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம்?

பணியிடங்கள் விவரம்

§ Carpenter

§ Electrician

§ Fitter

§ Machinist

§ Painter

§ Welder

§ Pasaa

§ MLT-Radiology

§ MLT-Pathology

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023

 

 

கல்வித் தகுதி ஐசிஎஃப்., சென்னையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மத்திய அல்லது மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில், ஏதேனும் ஒன்றில் 10,12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல, பணிக்கு சார்ந்த துறையில் ஐ.டி.ஐ., அல்லது அதற்கு மேல் படித்து முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். வயது வரம்பு ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 30-06-2023 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 15 மற்றும் அதிகபட்சம் 24 வயது உடையராக இருக்க வேண்டும். வயது தளர்வு உள்ளிட்ட முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முறை விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மறக்காதீங்க எழுத்து தேர்வு இல்லைங்க....!


விண்ணப்பம் செய்வோர் 'மெரீட் லிஸ்ட்', சான்று சரிபார்ப்பு முறையில் மட்டுமே பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

ஊதியம் மாதத்திற்கு, அப்ரண்டிஸ் (Apprentice) பதவிக்கு, ரூ. 6,000 - 7,000/- சம்பளம் வழங்கப்படும். இதர சலுகை குறித்த விபரங்களுக்கு, அதிகாரப்பூர் அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக் கட்டணம்

மற்ற விண்ணப்பதார்கள் - ரூ. 100/-

SC/ ST/ PwBD/ பெண்கள் விண்ணப்பதார்கள் - கட்டணம் கிடையாது

பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்


விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள், ICF சென்னை அதிகாரப்பூர்வ இணையதளமான https://pb.icf.gov.in/index.php இல் 30-06-2023 மாலை 5:30 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்கள் அனைத்தும் பயிற்சிக்கு மட்டும்; வேலைவாய்ப்புக்கு இல்லை என்பதை நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க... அப்புறம் போராட்டத்துக்கு தயாரா ஆகிடாதீங்க.. நிரந்தர வேலை கொடுன்னு... அது நல்லா இருக்காதுங்க... ஏனெனில் அறிவிப்பில் தெளிவாக சொல்லியிருக்காங்க...

https://pb.icf.gov.in/index.php

https://pb.icf.gov.in/act/instructions.php

 

Related Post