சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் 8 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான இண்டர்வியூ நாளை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை சென்னை, மதுரையில் நடைபெற உள்ள இண்டர்வியூவில் பங்கேற்றலாம்.
OptiSol Business Solutions என்பது ஐடி துறையில் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் ஐடி சர்வீசஸ் மற்றும் ஐடி கன்சல்டிங் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது இந்த நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி டிஜிட்டல் எம்எல் இன்ஜினியர், DevOpS இன்ஜினியர், டாட்நெட் டெவலப்பர், ஆட்டோமேஷன் டெஸ்ட் இன்ஜினியர், டேட்டா டெஸ்ட் இன்ஜினியர், பைனான்ஸ் எக்ஸிக்கியூட்டிவ், புராடெக்ட் ஓணர், சேல்ஸ் டெவலப்மெண்ட் ரிப்ரேஷ்சென்டேட்டிவ் உள்ளிட்ட 8 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 2023, 2024ல் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்களாக இருக்க வேண்டும். அதேபோல் 2025ம் ஆண்டு பேட்ஜ்ஜை சேர்ந்தவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இதன்மூலம் பணிக்கு முன்அனுபவம் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோருக்கு சிஜிபிஏ 7.5 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அதேபோல் மேற்கூறிய 8 பிரிவுகளில் தொடர்புடைய பணி பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றி தெரிவிக்கப்படலாம். இந்த பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் முறையான Call Letter உடன் செல்ல வேண்டும். இதற்கு அவர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று முன்கூட்டியே ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டு்ம்.
இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (டிசம்பர் 14) ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. சென்னையை பொறுத்தவரை Baid Hi Tech Park, 4th Floor, Thiruvanmiyur, ECR Road, Chennai 600 041 என்ற முகவரியிலும், மதுரையை எடுத்து கொண்டால் JK Tecton Grandis, 1st Floor, Kamala 2nd Street, Chinna Chokkikulam, Madurai 625002 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் talent@optisolbusiness.com என்பதை தொடர்பு கொள்ளலாம்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here