கர்நாடகா: . செமிகண்டக்டர் துறையில் புதிய தொழிற்சாலை..!

post-img

கெய்ன்ஸ் டெக்னாலஜி நிறுவனம் இன்னோவேஷன்-ஐ மேம்படுத்த கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்தது. கர்நாடக அரசும் கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ் மத்தியிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மதிப்பு 3,750 கோடி ரூபாய்.  

இந்த மாபெரும் முதலீட்டு திட்டத்தில் கர்நாடகா மாநிலத்தை OSAT மற்றும் PCB துறையில் இந்திய அளவில் முன்னணியில் வைக்கும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சுமார் 3,200 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இது உதவும்.

கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் கர்நாடகா மாநிலத்தில் 3,750 கோடி ரூபாய் முதலீட்டில் செமிகண்டக்டர் OSAT மற்றும் PCB உற்பத்தி தொழிற்சாலைகளை தனது கிளை நிறுவனத்தின் வாயிலாக அமைக்க உள்ளது. இதில் செமிகண்டக்டர் OSAT தொழிற்சாலையை கெய்ன்ஸ் செமிகான் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், PCB தொழிற்சாலையை கெய்ன்ஸ் சர்கியூட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் அமைக்க உள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவன பங்குகள் சுமார் 14 சதவீதம் உயர்ந்து 52 வார உயர்வான 2,122.85 ரூபாய் அளவீட்டை இன்று தொட்டு உள்ளது. மேலும் OSAT என்பது வெளி நிறுவனத்தின் இருந்து வாங்கப்பட்ட அதாவது அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட செமிகண்டக்டர்-ஐ அசம்பிளி மற்றும் டெஸ்டிங் செய்யும் தொழிற்சாலை. இந்த துறையில் தான் தற்போது டாடா முதல் பல நிறுவனங்கள் ஈடுப்பட துவங்கியுள்ளது.

கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ESDM Semicon துறையில் ஏற்கனவே மைசூரில் தொழிற்சாலை அமைத்து இப்பிரிவில் முன்னோடியாக உள்ளது. இந்தியாவில் செமிகண்டக்டர் துறை வேகமாக வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் குவிந்துக்கிடப்பது மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்கள் இத்துறைக்குள் நுழைய அதிகப்படியான ஆர்வம் காட்டி வருகிறது.

கர்நாடகாவில் கிட்டத்தட்ட 3 நிறுவனங்கள் செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது, தமிழ்நாட்டில் இதுவரையில் செமிகண்டக்டர் துறையில் பெரிய அளவிலான முதலீடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

Related Post