முக்கிய அறிவிப்பு.. அடுத்த 3 வருடம், 18 துறை.. AI தலைகீழாக மாற்றப்போகிறது..!

post-img

ஏற்கனவே விப்ரோ நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவின் தலைவர் ஐடி ஊழியர்களை AI குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது மட்டும் அல்லாமல் இனி வரும் காலக்கட்டத்தில் ஊழியர்களின் வருடாந்திர சம்பள உயர்வு upskilling and reskilling அடிப்படையில் தான் இருக்கும் என அறிவித்தார்.

க்சென்சர் நிறுவனம் அடுத்த 3 வருடத்தில் சுமார் 3 பில்லியன் டாலர் அளவிலான தொகையை டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவு மேம்பாட்டுக்காக முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த முதலீடு AI துறை சார்ந்த சேவையில் அக்சென்சர் நிறுவனத்தின் திறன் மேம்படுவது மட்டும் அல்லாமல் அதிக வர்த்தகத்தை இப்பிரிவில் பெற்ற முடியும்.

இதற்காக Accenture நிறுவனம் செயற்கை நுண்ணறிவு பிரிவில் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி சுமார் 80000 ஆக உயர்த்த திட்டமிட்டு உள்ளது. Accenture நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் தனது திறன் மேம்பாடு, ஊழியர்கள் எண்ணிக்கை உயர்வை சாத்தியப்படுத்த பல நிறுவனங்களை கைப்பற்றவும், புதிதாக ஊழியர்களை பணியில் அமர்த்தவும், தற்போது நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு கூடுதல் பயிற்சி கொடுத்து அதன் மூலம் இந்த இலக்கை அடைய உள்ளது.

Accenture to fire 7,000 in India as part of global cuts | Mint

இதன் வாயிலாக Accenture நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு தேவையான புதிய AI சேவைகளை எளிதாக வழங்க முடியும் என அக்செனசர் நிறுவனத்தின் சிஇஓ ஜூலி ஸ்வீட் வெளியிட்ட அக்சென்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அக்சென்சர் நிறுவனத்தின் இந்த 3 பில்லியன் டாலர் முதலீடு வாயிலாக சுமார் 19 துறையின் வர்த்தகம் மேம்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 10 வருடத்தில் AI டிரென்ட் பல துறைகளை, நிறுவனங்களை மாற்ற உள்ளது.

இதன் மூலம் மக்களின் வாழ்க்கை முறை, பணியாற்றும் முறை மாற உள்ளது. இதேபோல் ஜெனரேட்டிவ் ஏஜ மக்களின் பணி நேரத்தில் சுமார் 40 சதவீதத்தை பங்குகொள்ளும் எனவும் அக்சென்சர் நிறுவனத்தின் குரூப் தலைமை நிர்வாக அதிகாரி Paul Daugherty தெரிவித்துள்ளார்.

இதே அக்சென்சர் நிறுவனம் தான் அடுத்த சில மாதத்தில் செலவுகளை குறைக்கும் வகையில் சுமார் 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. இதற்கிடையில் தற்போது AI துறையில் வர்த்தகம் பெறுவதற்காக 3 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார்.

Related Post