சட்டம் படித்தவர்களுக்கு காந்தி கிராம பல்கலையில் வேலை.. 40 ஆயிரம் சம்பளம்! உடனே விண்ணப்பிக்கவும்!

post-img

திண்டுக்கல்: மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் சட்டம் சார்ந்த ஆலோசனை வழங்க 'லீகல் அட்வைஸர்' காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற வளர்ச்சிக்காகவும் காந்திய சிந்தனைகளை கற்பிப்பதற்கும் இந்தியாவில் உருவான முதல் பல்கலைக்கழகம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் 1976-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.

70 பேராசிரியர்கள், 140 அலுவலக ஊழியர்கள், 4,000 மாணவர்கள் எனப் பிரமாண்டமாக மலை அடிவாரத்தில் உள்ளது. தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், நேரடி கல்வி நிறுவனமாக செயல்படும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதிலுமிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்கு பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள், உடனடி வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கில், கடந்த சில ஆண்டுகளாக தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயர்கல்வி பெற முடியாதவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 3 மாதம் மற்றும் ஓராண்டு பட்டயப் படிப்பு, 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்பு என 36 வகையான தொழில் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் வேளான் சார்ந்த படிப்புகளுக்கும், சுகாதாரத்துறை சார்ந்த படிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Legal Advisor பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Legal Advisor பணிக்கான ஒரு காலிப் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாகவும், இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : Legal Advisor
பணியிடங்களின் எண்ணிக்கை : 1

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.12.2024
தேர்வு செய்யப்படும் முறை : நேரடி நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 13.12.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor's degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய - https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/L_A.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்..
ஊதிய விபரம்: தற்காலிக பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000 மாத ஊதியமாக வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 13.12.2024 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முகவரி: Board Room, Administrative block, The Gandhigram Rural Institute, Gandhigram - 624302, Dindigul, Tamil Nadu.
விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான அசல் சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு வரும்போது நேரில் கொண்டு வர வேண்டும்.
விதிமுறைகள்:
1. நேர்காணலின் போது விவரங்களின் அசல் ஆதாரங்களைத் தவறாமல் வழங்க வேண்டும்
2. விண்ணப்பதாரர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும்.
3. பதவியை நிரப்புவதற்கும், நிரப்பாததற்கும் பல்கலைக்கழகத்திற்கு உரிமை உள்ளது.
4. மாநில / மத்திய அரசில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
5. சட்டக் கோப்புகள்/நீதிமன்ற வழக்குகள்/கல்வி நிறுவன வழக்குகளைக் கையாள்வதில் குறைந்தபட்சம் 10 வருட அனுபவம்.
6. RTI விதிகளில் அறிவு." என கூறப்பட்டுள்ளது.

Related Post