ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் அனைத்து துறைகளிலும் நுழைந்து வரும் வேளையில் ஜியோ பிராண்ட் கீழ் அடுத்தடுத்து பல எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை தயாரித்து வெளியிட்டு வரும் வேளையில் சமீபத்தில் 16,499 ரூபாய் விலையில் அறிமுகம் செய்த லேப்டாப் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இதன் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இதேவேளையில் மத்திய அரசு இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் லேப்டாப் மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மட்டும் அல்லாமல் டேப்லெட் மற்றும் நோட்புக் உட்பட எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை இறக்குமதி செய்ய உரிமம் பெற வேண்டும் என கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது. இதன் மூலம் அனைத்து முன்னணி லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் உருவாகியுள்ளது.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது 16,499 ரூபாய் லேப்டாப் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.இதற்காக இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்தி நிறுவனமாக டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
தற்போது டிக்சன் டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ்-ன் மலிவுவிலை 4ஜி போனான பாரத் போன்களை தயாரித்து வருகிறது. தற்போது செய்யப்பட்ட ஒப்பந்தம் கீழ் டிக்சன் சுமார் 1.5 கோடி ஜியோ பாரத் போன்களை தயாரிக்கிறது. இதோடு அமெரிக்காவின் Sanmina உடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கூட்டணியில் சென்னையில் அமைக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொழிற்சாலையில் ஜியோ லேப்டாப் தயாரிக்கப்பட உள்ளது.
டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் தயாரிப்பதை காட்டிலும் Sanmina தொழிற்சாலையில் தயாரிப்பது தான் லாபம், காரணம் இக்கூட்டணி நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 51 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் இது சாத்தியமாக ஜியோ லேப்டாப்-க்கு போதுமான புக்கிங் வர வேண்டும் இல்லையெனில் அதிக எண்ணிக்கையிலான உற்பத்தியும், விற்பனையும் சாத்தியமாகாது
மேலும் ஜியோ லேப்டாப் பன்னாட்டு நிறுவனங்களின் லேப்டாப் உடன் போட்டிப்போடுமா..? என்றால் கட்டாயம் இல்லை, இந்த ஜியோ லேப்டாப் மாணவர்கள், துவக்க நிலையில் இருப்பவர்கள், சிறிய அளவிலான வர்த்தகத்தை மட்டுமே கைப்பற்ற முடியும்.
ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு உள்நாட்டு உற்பத்தி மற்றும் விற்பனையில் முக்கிய இடத்தை அடைய உள்ளது ஜியோ லேப்டாப் மூலம் அடையும். இந்த முயற்சியில் வெற்றி அடைவது மூலம் பெரிய அளவிலான வர்த்தகத்தையும் வளர்ச்சியை அடைய முடியும்.