சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனத்தில் 7 பிரிவுகளுக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ டிசம்பர் 14ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் காக்னிசண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அந்த நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.
அதன்படி தற்போது காக்னிசண்ட்டில் இருந்து Cloud Validation, Databricks, MSBI (SSIS/SSRS/SSAS, Pyspark, Python, MSFTPowerBI, SQLServer உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பிரிவில் டெவலப்பர் ஸ்கில்ஸ் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் அதிகபட்சமாக 9 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்பட உள்ளது.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது டிசம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது 5/535, Old Mahabalipuram Road OkkiaM - Thoraipakkam, Chennai என்ற முகவரியில் உள்ள காக்னிசண்ட் புவுண்டேஷன் நிறுவனத்தில் நடைபெற உள்ளது.
இந்த பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Resumes மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைத்திருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளனர்கள் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இல்லாவிட்டால் அன்றைய தினம் மதியம் 12 மணி வரை நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோருக்கும் அனுமதி வழங்கப்பட உள்ளது.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
இண்டர்வியூ நடக்கும் முகவரி பற்றி அறிய Click Here