சிறைத்துறையில் பெண்களுக்கு வாய்ப்பு.... ஊதியம் மாதம் ரூ.1.30 லட்சம்..!

post-img

தகுதி, ஆர்வமுள்ளவர்கள் மே.,11க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

மேலாண்மை: மாநில அரசு

 
சிறைத்துறையில் கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்பு...!

பதவிகள் விவரம்

உதவி சிறை அலுவலர் (ஆண்கள்)

உதவி சிறை அலுவலர் (பெண்கள்)

பணியின் பெயர்: தமிழ்நாடு சிறைப்பணிகள்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.05.2023

 பணியிடங்கள் எண்ணிக்கை: 59

https://www.highrevenuegate.com/z3u4wfuq?key=0a7ba0f3184cba0df8e5821dc71399b7

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1.07.2023 அன்று 32 வயது நிறைவடைந்திருக்கக்கூடாது. ஆதி திராவிடர், ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு கிடையாது. வயது வரம்பில் சலுகை கோரும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்

ஊதியமாக, மாற்றியமைக்கப்பட்ட சம்பள முறை நிலை -11இன்படி, ரூ. 35,400 - ரூ.1,30,400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

உதவி சிறை அலுவலர் ஆண்கள் மற்றும் பெண்கள் பதவிகளுக்கு, 12.04.2023 படி விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள கல்வி தகுதியினை அல்லது அதற்கு இணையான படிப்பினை பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

· ஒரு முறை பதிவு கட்டணம் - ரூ.150/- இருப்பினும், ஏற்கனவே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை

· தேர்வுக் கட்டணம் - ரூ.200/-

ப்ளீஸ் நோட் இட்...!

விண்ணப்ப அறிவிக்கை நாள் - 12.04.2023

இணையம் வழி விண்ணப்பத்தை, 11.05.2023 அன்று இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க இயலும். பின்னர், அச்சேவை நிறுத்தப்படும்.

இணையவழி விண்ணப்பத்தை, 16.04.2023 - நள்ளிரவு 12.01 மணி முதல் 18.05.2023 இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம்.

எழுத்து தேர்வு இரண்டு தாள்களாக, வரும் ஜூலை 1ம் தேதி நடைபெறும்.

 

 

கணினி வழித்தேர்வு நடக்கும் நாள், நேரம்

தாள் -1 பாடத்தாள் பட்டப்படிப்புத்தரம்

01.07.2023 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.

தாள் -2 பகுதி -அ கட்டாய தமிழ்மொழி தகுதி(10ம் வகுப்புத் தரம்) மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு, பகுதி -அ பொது அறிவு, திறனறிவு தேர்வு (பட்டப்படிப்புத் தரம்)

01.07.2023 பிற்பகல் 02.00 மணி முதல் பிற்பகல் 05.00 வரை

கவனமாக வாசிக்கவும்...!

விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களின் புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்து கொள்ளுங்கள்.

மேலும், தங்கள் கல்வி மற்றும் பிற சான்றிதழ்களை கையில் வைத்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு விவரம்

முதல் தாளில் Constitution and Human Rights, Administration of Union and States with special reference to Tamil Nadu, Socio-Economic issues in India / Tamil Nadu, Current issues at National Level, Current issues at State Level ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டாம் தாள் இரண்டு பகுதிளாக நடைபெறும். முதல் பகுதி பொதுத் தமிழ். இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 60. தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டாம் தாள் பொது அறிவு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம். விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடும் வழங்கப்படும்.

ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==

https://www.tnpsc.gov.in/English/Notification.aspx

பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா? ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில்...

 

Related Post