மத்திய அரசின் மருத்துவமனைகளில் பணிபுரிய ஆர்வம்...?

post-img

தகுதி, ஆர்வமுள்ளவர்கள் மே.,5க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நாளை கடைசி நாளாகும். மறக்காதீங்க... ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்பதால் ஈஸி தான்....!

 

நிர்வாகம்: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS)

மேலாண்மை: மத்திய அரசு

 
எய்ம்ஸ்ல் நர்சிங் பணி...!

பதவிகள் விவரம்

நர்சிங் ஆபீசர் (Nursing Officer)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.05.2023 (நாளை கடைசி)

பணியிடங்கள் எண்ணிக்கை: 3055

 

 

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி செய்திருப்பதோடு, 30 வயதை நிறைவடைந்திருக்கக்கூடாது. வயது வரம்பில் சலுகை கோரும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்

மாற்றியமைக்கப்பட்ட சம்பள முறை படி, ஊதியமாக ரூ.9,300 - ரூ.34,800 உடன் கிரேடு பே ரூ.4,600 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் B.Sc. (Hons.) Nursing / B.Sc. Nursing/ B.Sc. (Post-Certificate) / Post-Basic B.Sc. Nursing படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாநில/இந்திய நர்சிங் கவுன்சிலில் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சியாக பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது Diploma in General Nursing Midwifery தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

· பொதுப் பிரிவினருக்கு ரூ.3000; பட்டியலின / பழங்குடியின பிரிவினர் ஆகியோருக்கு ரூ.2400 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணம் ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.

மறக்காதீங்க நோட் இட் ப்ளீஸ்...!

விண்ணப்ப அறிவிக்கை நாள் - 12.04.2023

இணையம் வழி விண்ணப்பத்தை, 05.05.2023 அன்று 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க இயலும். பின்னர், அச்சேவை நிறுத்தப்படும்.

Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET), Merit List & Allocation of Seats ஆகியவைகளின் அடிப்படையில், 3055 காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கவனமாக வாசிக்கவும்...!

விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் https://norcet4.aiimsexams.ac.in/Home/Notification ஆகிய தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களின் புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்து கொள்ளுங்கள்.

மேலும், தங்கள் கல்வி மற்றும் பிற சான்றிதழ்களை கையில் வைத்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு விவரம்

கணினி வாயிலாக ஜூன் 3ல் தேர்வு நடைபெறும். மறக்காதீங்க 48 மணி நேரம் இருக்கு.. பொறுமையாக படிச்சீட்டு அப்ளை பண்ணுங்க...!

ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

https://norcet4.aiimsexams.ac.in/?AspxAutoDetectCookieSupport=1

https://docs.aiimsexams.ac.in/sites/3_Common_Notice for NORCET-4.pdf

Related Post