திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறையில் காலியாக உள்ள டாக்டர், ஸ்டாப் நர்ஸ், பிசியோதெரபிஸ்ட், டிரைவர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் 69 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.60 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது. விண்ணப்பம் செய்ய டிசம்பர்31ம் தேதி கடைசி நாளாகும்.
திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு சித்த மருத்துவ பிரிவு, திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் இந்த பணியிடங்கள் இண்டர்வியூ போஸ்ட் மற்றும் இண்டர்வியூ இல்லாத போஸ்ட் என்று மொத்தம் 2 வகைகளில் நிரப்பப்பட உள்ளது. எந்தெந்த பணியிடங்கள் காலியாக உள்ளன. அதற்கான சம்பளம் என்ன? என்பது பற்றிய விபரம் வருமாறு:
டாக்டர்
மெடிக்கல் ஆபிசர் பிரிவில் மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எம்பிபிஎம்எஸ் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் மருத்துவமனை குவாலிட்டி மேனேஜர் பிரிவுக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு எம்பிபிஎஸ், டென்டல், ஆயுஷ், பாரா மெடிக்கல் டிகிரியில் ஏதேனும் ஒன்று முடித்துவிட்டு மாஸ்டரில் ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், ஹெல்த் மேனேஜ்மென்ட் பப்ளிக் ஹெல்த் பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பம் செய்லயாம்.
மைக்ரோபயாலஜிஸ்ட் - ஐடி கோ ஆடிநேட்டர்
அடுத்தப்படியாக மைக்ரோபயாலஜிஸ்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு எம்பிபிஎஸ், எம்டி (மைக்ரோபயாலஜி) அல்லது எம்எஸ்சி, மெடிக்கலில் மைக்ரோபயாலஜி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். அதேபோல் டென்டல் சர்ஜன் பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளார். பிடிஎம் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.34 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.
மேலும் சோசியல் வொர்க்கர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். எம்ஏ சோசியாலஜி (சோசியல் வொர்க் மெடிக்கல்/Psychiatry) மாஸ்டர் ஆஃப் சோசியல் வொர்க் (மெடிக்கல் மற்றும் Psychiatry) முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.மாதம் ரூ.23,800 சம்பளமாக வழங்கப்படும். ஐடி கோ ஆடிநேட்டர் பிரிவுக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். எம்எஸ்சி (ஐடி), பிஇ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். இந்த 12 பணிகளும் இண்டர்வியூ வகையை சேர்ந்ததாகும். இனி இண்டர்வியூ இல்லாத பிரிவில் நிரப்பப்பட உள்ள 57 பணியிடங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஸ்டாப் நர்ஸ்
ஸ்டாப் நர்ஸ் பிரிவில் 9 பணியிடங்களும், மிட் லெவல் ஹெல்த் புரோவைடர் பிரிவில் 6 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இந்த 15 பணிகளுக்கு டிப்ளமோவில் ஜிஎன்எம், பிஎஸ்சி நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
பார்மசிஸ்ட்
டிராமா ரிஜிஸ்ட்டி அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். நர்சிங்கில் டிப்ளமோ/டிகிரி முடித்து கம்ப்யூட்டர் அறிவு உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.18,000 வழங்கப்படும். அதேபோல் OT Techncian பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிப்ளமோவில் OT Technican படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
பார்மசிஸ்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.டிப்ளமோ பார்மஸி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
அசிஸ்டென்ட் Cum டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்படுகிறார். கம்ப்யூட்டர் கிராசூவேட் அல்லது டிகிரியுடன் டிசிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும். டென்டல் அசிஸ்டென்ட் பிரிவில் ஒரு இடம் நிரப்பப்பட உள்ளது. 10ம் வகுப்பு படித்து டென்டல் ஹைஜினிக்கில் அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.13,800 சம்பளமாக கிடைக்கும்.
அதேபோல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு கம்ப்யூட்டர் கிராசூவேட் அல்லது டிகிரியுடன் டிசிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். இதில் District Mental Health program பணி என்றால் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியுடன் ஜுனியர் அசிடென்ட்/கேஸ் ரிஜிஸ்ட்டி அசிஸ்டென்ட் பணியையும் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
பிசியோதெரபிஸ்ட் - ரேடியோகிராபர் - டிரைவர்
பிசியோதெரபிஸ்ட் பணிக்கு 3 தேர்வு செய்யப்பட உள்ளனர். இளங்கலை பிரிவில் பிசியோதெரபிஸ்ட் படிப்பை முடித்த 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மாதம் ரூ.13 ஆயிரம் வழங்கப்படும். ரோடியோகிராபர் பணிக்கு 3 பேரின் தேவை உள்ளது. டிப்ளமோ ரேடியா டயக்னோஸ் டெக்னாலஜியில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.13,300 சம்பளமாக வழங்கப்படும்.
அதேபோல் தமிழ்நாடு விபத்து மற்றும் அவரச பிரிவு ஓடி அசிஸ்டென்ட் பிரிவில் ஒரு இடம் நிரப்பபட .ள்ளது. தியேட்டர் அசிஸ்டென்ட், பாராமெடிக்கல்சர்ட்டிபிகேட் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். டிரைவர் பிரிவில் ஒரு இடம் நிரப்பபட உள்ளது. 10 ம் வகுப்பு பாஸ் அல்லது பெயில் ஆகி லைசென்ஸ் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.13,500 சம்பளமாக கிடைக்கும்.
8ம் வகுப்பு பெயில் ஆனோருக்கான பணி
இதுதவிர மாதம் ரூ.8,500 சம்பளத்தில் கிளீனர் பணிக்கு 2 பேர், ஹாஸ்பிட்டல் அட்டென்ட் பணிக்கு ஒருவர், சானிட்டரி அட்டென்ட் பணிக்கு ஒருவர், Palliative care ஹாஸ்பிட்டல் வொர்க்கல் பணிக்கு ஒருவர், செக்யூரிட்டி பணிக்கு ஒருவர், ஹாஸ்பிட்டல் வொர்க்கர் பணிக்கு 2 பேர், CEm ONC Security Guards பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதேபோல் மாதம் ரூ.8,500 சம்பளத்தில் லேப் அட்டென்ட் பணிக்கு ஒருவரும், மல்டி பர்பஸ் ஹாஸ்பிட்டல் பணிக்கு 45பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் தமிழ்நாடு விபத்து மற்றும் அவரச பிரிவில் மல்டி டாஸ்க் வொர்க்கர் பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இந்த பணிகளுக்கு அனைத்தும் 8 ம் வகுப்பு பாஸ் அல்லது பெயில் ஆனவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இண்டர்வியூ என்பது கிடையாது. தேசிய சுகாதார குழும திட்டத்தின் கீழ் இது ஒரு 11 மாத காலத்துக்கான ஒப்பந்த பணியாகும். பணி நிரந்தரம் செய்யப்படாது. தற்காலிகமான இந்த பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விருப்பம் உள்ளவர்கள் https://tirunelveli.nic.in இணையதளம் மூலம் டிசம்பர் மாதம் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூ்ர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here