ஆனால் இது அனைத்தும் கொரோனா தொற்றுக்கு பின்பு மாறியது என்றால் மிகையில்லை, லாக்டவுன் முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்து BYJUs நிறுவனத்தின் வளர்ச்சி தகர்ந்தது, ஆன்லைன் வாயிலாக கல்வி கற்பதை விடவும் பள்ளிக்கு சென்று கற்பது தான் பெட்டர் என பெரும்பாலான பெற்றோர்கள் நினைத்த காரணத்தால் BYJUs வாடிக்கையாளர்கள் படை குறைந்தது.
இதனால் BYJUs நிர்வாகம் பல்வேறு செலவுகளை குறைக்க திட்டமிட்டது, இதன்படி அக்டோபர் 2022ல் நிறுவனத்தில் 2500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும், இதன் மூலம் மார்ச் 2023க்குள் லாபகரமான நிறுவனமாக மாறவும் திட்டமிட்டு உள்ளதாக அறிவித்தது.
இந்தியாவில் அதிக மதிப்புடைய ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருக்கும் BYJUs ஐபிஓ வெளியிட்டு இந்திய பங்குச்சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பாதையில் செலவுகளை குறைப்பது முக்கியமானதாக இருக்கும் வேளையில் பணிநீக்கத்தை அறிவிக்க துவங்கியது BYJUs நிர்வாகம்.
ஏற்கனவே பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்ட BYJUs நிர்வாகம் தற்போது மீண்டும் பணிநீக்க அறிவிப்பை திங்கட்கிழமை அறிவித்துள்ளது. திங்கட்கிழமை வெளியான அறிவிப்பின் படி BYJUs தனது மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இதன் மூலம் BYJUs நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையான 50000 அளவில் பெரிய அளவிலான மாற்றமில்லை, காரணம் புதிய ஊழியர்களின் சேர்ப்பு ஊழியர்கள் எண்ணிக்கை சரிவை ஈடு செய்துள்ளது.
Byjus நிறுவனம் சமீபத்தில் இந்நிறுவனத்தில் கடன் வழங்கியவர்களுக்குமான பிரச்சனைக்கு பின் 1.2 பில்லியன் டாலர் கடனுக்கு இனி எவ்விதமான தொகையும் செலுத்த வேண்டாம் என்று பைஜூஸ் முடிவு செய்தது இந்திய ஸ்டார்ட்அப் துறையை அதிர்ச்சி அடைய செய்தது.