மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஐபி எனும் (Inteligence Bureau) உளவுப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த உளவுப்பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:
மத்திய உளவுப்பிரிவில் காலியாக உள்ள 797 ஜூனியர் இன்டெலிஜென்ஸ் ஆபிசர் (கிரேடு II/ Technical) பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு இந்தியாவில் எந்த பகுதிகளில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சமாக 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் வயது தளர்வு உண்டு. இதுதவிர பிற பிரிவினருக்கும் அரசு விதிகளின் படி வயது தளர்வு என்பது அளிக்கப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.25,500 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பம் செய்வோர் டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்யூட்டர் சயின்ஸ், கம்யூட்டர் என்ஜினீயரிங், கம்யூட்டர் அப்ளிகேசன்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இளங்கலை படிப்பில் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல், கணிதம் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இதுவும் இல்லாவிட்டால் பிசிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளோர் www.mha.gov.in அல்லது www.ncs.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் ஜூன் மாதம் 26ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு தேர்வு கட்டணம் ரூ.400ம், ப்ராசஸிங் கட்டணமாக ரூ.50 என மொத்தம் விண்ணப்ப கட்டணமாக ரூ.450 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிப்போர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here