சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள 04 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிர்வாக பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது. கோயில்களில் உள்ள காலிப்பணியிடங்களையும் உரிய அறிவிப்புகளை வெளியிட்டு இந்து சமய அறநிலையத்துறை நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்பொது அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாளாகும்.
பணியிடங்கள் விவரம்:
சுயம்பாகி - 01
மின் பணியாளர் - 01
பகல்காவலர் - 01
திருவலகு - 01
என மொத்தம் 4 பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
சுயம்பாகி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். திருக்கோயில் வழக்கப்படி நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்து இருக்க வேண்டும். திருக்கோயில் பூஜை மற்றும் திருவிழாக்கள் பற்றிய விவரங்கள் தெரிந்து இருக்க வேண்டும்.
* மின் பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் மின்சார வாரியம் தொழில் தூறை பயிற்சி (ஐடிஐ) பயின்றதற்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். மின்சார வாரியத்தால் வழங்கப்பட்ட 'பி' சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். இதர இரண்டு பணியிடங்களுக்கும் தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.
சம்பளம் எவ்வளவு?:
சுயம்பாகி - ரூ.13,200 - 41,800
மின் பணியாளர் - ரூ.12,600 - 39,900
பகல்காவலர் - ரூ.11,600 - 36,800
திருவலகு - 10,000 - 31,500
பிற நிபந்தனைகள்: விண்ணப்பதாரர்கள் 01.7.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்து 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை திருக்கோயில் அலுவலக்த்தில் அல்லது இந்து சமய அறநிலையத்துறை www.tnhrcegov.in என்ற இணையளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் நன்கு படிக்க தெரிந்து இருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இறை நம்பிக்கை உடையவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்துடன் கோரப்பட்டுள்ள சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.12.2024 - திங்கள் கிழமை மாலை 5.45 மணிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/192/document_1.pdf
Weather Data Source: Wettervorhersage 21 tage