நோ எக்ஸாம்! 10ம் வகுப்பு போதும்! சென்னை விமான நிலையத்தில் ஏகப்பட்ட வேலை..

post-img

சென்னை விமான நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக ஏகப்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. எழுத்து தேர்வு இன்றி இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் கைநிறைய சம்பளம் வழங்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இந்திய விமான ஆணையத்தின் கட்டுப்பாட்டில் ஏஏஐ கார்கோ லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அலைட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் (aai cargo logistics and allied services company limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த கம்பெனி சார்பில் சென்னை விமான நிலையத்தில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது தற்போது வெளியாகி உள்ளது.

அதன் விபரம் வருமாறு:

ஏஏஐ கார்கோ லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அலைட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் சென்னை விமான நிலையத்தில் டிராலி ரெட்ரிவர் (Trolley Retriever) பணிக்கு மொத்தம் 105 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் பொதுப்பிரிவினர் 44 பேர், ஓபிசி பிரிவினர் 28 பேர், எஸ்சி பிரிவினர் 15 பேர், எஸ்டி பிரிவினர் 7 பேர், இடபிள்யூஎஸ் பிரிவினர் 11 பேர் என மொத்தம் 105 பேர் ணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும். அதோடு விண்ணப்பத்தாரர்கள் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும் தளர்வு அளிக்க்படும். வயது வரம்பானது 01.08.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

மேலும் டிராலி ரெட்ரீவர் பணிக்கு நல்ல உடல்திறன் கொண்டிருப்பது அவசியமாகும். அதன்படி விண்ணப்பம் செய்வோர் 167 சென்டிமீட்டருக்கு குறையாமல் வளர்ந்திருக்க வேண்டும். அதோடு 55 கிலோவுக்கு குறைவான எடையுடன் இருக்க கூடாது. மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.21,300 சம்பளமாக வழங்கப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் www.aaiclas.aero இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் என்பது கிடையாது.

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு இன்றி உடல்திறன் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் முதல் 3 ஆண்டுகள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். அதன்பிறகு தேவை எனில் பணி நீட்டிப்பு செய்யப்படும்

பணி தொடர்பான அதிகார்ப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here


Related Post