வேலைவாய்ப்பு திருவிழா திட்டம்: 71,000 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி!

post-img
டெல்லி: வேலைவாய்ப்புத் திருவிழா திட்டத்தின் கீழ் 71,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் வழங்கினார். நாடு முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு திருவிழா நடைபெற்றது. வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வேலைவாய்ப்பு திருவிழா அமைந்துள்ளது. தேச கட்டமைப்பு மற்றும் சுய அதிகாரமளித்தல் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்கேற்புக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை இது வழங்கும். நாடு முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு திருவிழா நடைபெற்றது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான பணி நியமனங்கள் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நியமனங்கள், உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, உயர் கல்வித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதி சேவைகள் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளில் அமையும். இந்த வேலைவாய்ப்புத் திருவிழாவில் சுமார் 71,000 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் வேலைவாய்ப்பு நியமன ஆணைகளை வழங்கினார்.

Related Post