சென்னை: இந்தியன் அஞ்சல் கட்டண வங்கியில் ( (IPPB) ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 68 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 2.25 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கான கல்வித்தகுதி என்ன? எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின், அஞ்சல் துறையின் உரிமையின் கீழ் இந்தியா அஞ்சல் கட்டண வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த வங்கியில் தற்போது நாடு முழுவதும் 7 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகிறது.
அந்த வகையில், ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்டன் மேனேஜர், மேனேஜர் உள்பட 68 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், இதற்கான கல்வித்தகுதி என்ன என்பனவற்றை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: அசிஸ்டண்ட் மேனேஜர் (ஐடி) - 54 பணியிடங்கள், மேனேஜர் ஐடி (பேமண்ட்ஸ் சிஸ்டம்) - 1, மேனேஜர் ஐடி (இன்ப்ராஸ்ட்ரக்சர் நெட்வொர்க் & கிளாட்) -1, மேனேஜர் ஐடி (பேமண்ட்ஸ் சிஸ்டம்) உள்பட மொத்தம் 68 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி: கல்வித்தகுதியை பொறுத்தவரை பி.இ மற்றும் பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பி இ கம்யூட்டர் சயின்ஸ், இன்பார்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இஸ்ண்ட்ரக்ஸன் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை எடுத்து பரித்து இருக்க வேண்டும். கல்வித்தகுதி தொடர்பான முழு அறிவிப்பினை தேர்வு அறிவிப்பில் பார்த்த் தெரிந்துகொள்ளலாம்.
வயது வரம்பு: அசிஸ்டண்ட் மேனேஜர் (ஐடி), மேனேஜர் ஐடி (பேமண்ட்ஸ் சிஸ்டம்), மேனேஜர் ஐடி (இன்ப்ராஸ்ட்ரக்சர், நெட்வொர்க் & கிளாட்) உள்ளிட்ட பணியிடங்களுக்கு 23 முதல் 35 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 26 வயது முதல் 35 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 1,40,398 முதல் ரூ.2,25,937 வழங்கப்படுகிறது.
அசிஸ்டண்ட் மேனேஜர் (ஐடி) - ரூ. 1,40,398
மேனேஜர் ஐடி (பேமண்ட்ஸ் சிஸ்டம்) - ரூ. 1,77,146
மேனேஜர் ஐடி (இன்ப்ராஸ்ட்ரக்சர், நெட்வொர்க் & கிளாட்) - ரூ. 1,77,146
மேனேஜர் ஐடி (பேமண்ட்ஸ் சிஸ்டம்) - ரூ.2,25,937
விண்ணப்பிப்பது எப்படி?: விண்ணப்பதாரர்கள் www.ippbonline.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நாள் 21.12.2024. விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2025 ஆகும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் டெஸ்ட், குரூப் டிஸ்கசன், இண்டர்வியூவ் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை ஆன்லைன் வழியாக கட்ட வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.750 ஆகும். மாற்றுத்திறனாளிகள், எஸ்சி / எஸ்டி பிரிவினர் ரூ.150 செலுத்தினால் போதும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.ippbonline.com/documents/20133/133019/1734713243450.pdf