782 காலியிடங்கள்.. எழுத்து தேர்வு இல்லை.. ரயில்வேயில் வேலை., சென்னை ஐசிஎப்

post-img

சென்னையில் ஐசிஎப் எனும் இணைப்பு ரயில் பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பின்படி ஐசிஎப்-ல் காலியாக உள்ள 782 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி கார்பென்டர், எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், பெயிண்டர், வெல்டர், எம்எல்டி ரேடயோலாஜி, எம்எல்டி பாதோலாஜி உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 782 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு அல்லது அதுதொடர்பான துறையில் ஐடிஐ படிப்பை முடித்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்வோர் குறைந்தது 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 30.6.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் வயது வரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 5 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்பட உள்ளது. இது ஒரு அப்ரென்டீஸ் வகை பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தது ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை சம்பளத்துக்கு பதில் உதவித்தொகையாக வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://pb.icf.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் மெரீட் லிஸ்ட், சான்று சரிபார்ப்பு முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விபரங்களை கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here


Related Post