பிசிஏ, பிஎஸ்சி முடித்தோருக்கு ஜாக்பாட்.. ஜனவரி 10ம் தேதி கடைசி நாள்.. டிசிஎஸ் தரும் அசத்தலான வேலை

post-img
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் பிசிஏ, பிஎஸ்சி டிகிரி முடித்தவர்களுக்கான பிரத்யேக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பம் செய்ய 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு பிப்ரவரி 14ம் தேதி தேர்வு என்பது நடைபெற உள்ளது. பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் TCS B.Sc Ignite & Smart Hiring Batch - 2024 என்ற பெயரில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த பணிக்கு பிசிஏ, பிஎஸ்சி, B.Voc பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பிஎஸ்சி என்றால் ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், டேட்டா சயின்ஸ், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, எலக்ட்ரானிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, பயோ கெமிஸ்ட்ரி உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களும், அதேபோல் B.Voc என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் அனைவரும் 2025ம் ஆண்டில் படிப்பை முடித்திருப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு அரியர் என்பது இருக்கலாம். ஆனால் பணியில் சேர்வதற்கு முன்பு அதனை கிளியர் செய்யும் வகையில் இருக்க வேண்டும். இந்த பணிக்கு இன்ஜினியரிங் முடித்தவர்களால் பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியாது. தற்போதைய அறிவிப்பின்படி மேற்கண்ட படிப்பை முடித்திருந்தாலும் கூட TCS BSc Ignite மற்றும் TCS Smart Hiring என்று 2 பிரிவுகளில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யபப்பட உள்ளனர். இதில் TCS BSc Ignite என்பதை பொறுத்தவரை சயின்ஸ் மற்றும் சாப்ட்வேர் புரோகிராம் பயிற்சி ழங்கப்படும். சாப்ட்வேர் இன்ஜினியரிங் பணிக்கான பயிற்சிகள் கூட வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பின்படி Cloud, Blockchain, AR/VR/XR, AI/ML/GenAI, robotics, Digital Engineering உள்ளிட்டவை சொல்லி தரப்படும். அதோடு கிராசூவேட் இன்ஜினியரிங் டீமுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி உயர்படிப்புக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். அதாவது இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழங்களில் PG டிகிரி முடிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இவை அனைத்தும் TCS Ignite முறையில் பணியில் சேர விரும்புவோருக்கு கிடைக்கும். அதேவேளையில் TCS Smart Hiring முறையில் பணியில் சேர விரும்புவோருக்கு டெக்னோ ஃபங்சனல் ரோல் (Techno Functional Role) பணி வழங்கப்படும். இன்ஜினியரிங், குவாலிட்டி அசூரன்ஸ், டேட்டா அனலிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியமர்த்தப்படுவார்கள். அதுதொடர்பான டெக்னிக்கல் ஸ்கில்ஸ் சார்ந்த பயிற்சி என்பது வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 2025ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதிக்குள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு சென்று விண்ணப்பம் செய்து கொள்ளலாம். . இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு 2025 பிப்ரவரி 14ம் தேதி என்பது நடத்தப்படும். தேர்வு ஆன்லைனில் நடக்காது. தேர்வு மையங்களில் வைத்து தேர்வு என்பது நடத்தப்படும். தேர்வு என்பது 2 மணிநேரம் இருக்கும். தேர்வுக்கான மாடல் வினாத்தாள் அதிகாரப்பூர்வ அறிப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி தயாராகி இருந்தாலே பணிக்கு தேர்வாகலாம். இந்த தேர்வில் Numerical Ability, Verbal Ability, Reasoning Ability, Coding (Optional) அடிப்படையில் கேள்விகள் என்பது இருக்கும். மேலும் இந்த பணியிடங்கள் First Come First Serve முறையில் நிரப்பப்பட உள்ளது. அதாவது ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் முதலில் விண்ணப்பம் செய்வோருக்கு மட்டுமே அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைக்கும். தாமதமாக விண்ணப்பம் செய்யும்போது அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைக்காமல் தூரத்தில் உள்ள தேர்வு மையம் கிடைக்கும் நிலை உருவாகலாம். மேலும் தேர்வு மையத்தை ஒருமுறை தேர்வு செய்தால் மாற்றம் செய்ய முடியாது. இதனால் கவனமுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வது தொடர்பான முழுவிபரம் கீழே உள்ள லிங்க் மூலம் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகங்கள் ஏதுவும் இருப்பின் lip.support@tc.com, Toll free - 18002093111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Related Post