AIIMS Junior Resident Recruitment : ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் ஜூனியர் ரெசிடென்ட் பணி

post-img

தகுதி, ஆர்வமுள்ளவர்கள் ஆக.,16க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது. மறக்காதீங்க... ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்பதால் ஈஸி தான்....!

நிர்வாகம்: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS)

மேலாண்மை: மத்திய அரசு

பதவிகள் விவரம்  ஜூனியர் ரெசிடென்ட் (Junior Resident)

பணியிடம்:

ரேபரலி (உத்தர பிரதேசம்)

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.08.2023

பணியிடங்கள் எண்ணிக்கை: 40

வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 37 வயதை நிறைவடைந்திருக்கக்கூடாது. வயது வரம்பில் சலுகை கோரும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம் மாற்றியமைக்கப்பட்ட சம்பள முறை படி, ஊதியமாக ரூ.56,100 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.சி.ஐ.,யில் பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

பொதுப் பிரிவினருக்கு ரூ.1000; பட்டியலின / பழங்குடியின பிரிவினர் ஆகியோருக்கு ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணம் ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவதில் இருந்து ஒரு சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மறக்காதீங்க நோட் இட் ப்ளீஸ்...!

விண்ணப்ப அறிவிக்கை நாள் - 25.07.2023

இணையம் வழி விண்ணப்பத்தை, 16.08.2023 அன்று 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க இயலும். பின்னர், அச்சேவை நிறுத்தப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு(MCQ based)ஆகியவைகளின் அடிப்படையில், 40 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர்.

கவனமாக வாசிக்கவும்...!

விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் https://aiimsrbl.edu.in/recruitments ஆகிய தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்கள் புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்து கொள்ளுங்கள். என்னென்ன முறையில் ஆவணங்கள் அப்லோடு செய்ய வேண்டும் என்பன குறித்த விரிவான நிபந்தனைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

அதுகுறித்து படித்தறிந்து தெரிந்து கொள்ளவும். மேலும், தங்கள் கல்வி மற்றும் பிற சான்றிதழ்களை கையில் வைத்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும்.

Related Post