சென்னை: பிரபல ஐடி நிறுவனமான கேப்ஜெமினியில் இருந்து பிகாம் மற்றும் பிஏஎஃஎப் படிப்பை முடித்தோருக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்குதேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதுடன், ரூ.25 ஆயிரம் இன்சென்டிவ் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பம் செய்ய 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி கடைசி நாளாகும்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக Capgemini (கேப்ஜெமினி) செயல்பட்டு வருகிறது. பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் நம் நாட்டில் பெங்களூர், மும்பை, புனே, சென்னை உள்பட பல இடங்களில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் தான் கேப்ஜெமினியில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள வேலைவாய்ப்பு குறித்த முக்கிய தகவல்கள் வருமாறு:
கேப்ஜெமினி நிறுவனத்தில் Capgemini Exceller 2024 off campus CEO என்ற பெயரில் DCoE (Deal Centre of Excellence)Processor ரோலுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிகாம், பிஏஎஃப் படிப்பை 2024ம் ஆண்டில் முடித்திருக்க வேண்டும்.இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
அதேபோல் விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். நல்ல இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டம். அதேபோல் Excel தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக VLOOKUP, Formatting, data sort உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டம். 24X7 என்ற முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். அதாவது ஷிப்ட்டில் பணியாற்ற வேண்டி இருக்கும். குறிப்பாக நைட் ஷிப்ட் இருக்கும்.
இந்த பணிக்கு ஆண்டு சம்பளமாக ரூ.3 லட்சம் வழங்கப்பட உள்ளது. அதோடு ஒன் டைம் இன்செட்டிவ்வாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மும்பையில் உள்ள கேப்ஜெமினி நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Capgemini நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 2025 ஜனவரி மாதம் 10 ஆகும். அன்றைய தினம் நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இதனால் அதற்கு முன்பே விண்ணப்பிப்பது நல்லது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு Active DigiLocker அக்கவுண்ட் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here