நடிகர் சூர்யா, ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.
மட்டுமில்லாமல் ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக உணவு முறை மற்றும் அன்றாடம் உடற்பயிற்சி செய்வது என தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கடைசியாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மரண அடி வாங்கியது. அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். வசந்த் இயக்கத்தில் உருவான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் தான் சூர்யாவும் ஜோதிகாவும் முதன்முறையாக சேர்ந்து நடித்தார்கள்.
அப்போதே இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்து இருக்கிறது. தொடர்ந்து அவர்கள் காக்க காக்க, பேரழகன், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.
இரண்டு பேரின் காதலுக்கு முதலில் சிகப்பு கொடி காட்டினார் சிவக்குமார். இந்த காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஜோதிகா வேறு மதத்தை சேர்ந்தவர் என்று கூறப்பட்டது.
ஒரு கட்டத்தில் இருவரும் தங்களுடைய இருவீட்டார் சம்மதத்துக்காக பல வருடங்கள் காத்திருந்தார்கள். ஒரு வழியாக சிவக்குமார் பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு இரண்டு பேருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இதில் திரையரங்க நட்சத்திரங்கள் தமிழக முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இன்னும் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். சூர்யா ஜோதிகாவுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
சூர்யாவின் மகளும் மகனும் பெரும்பாலும் வெளியில் தலை காட்டாதவர்கள். அவ்வப்போது ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு வரும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் இணைய பக்கங்களில் வெளியாகி ட்ரெண்டாவது வாடிக்கை.
இந்நிலையில் மகன் தேவ் சமீபத்தில் கராத்தே போட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சூர்யா ஜோதிகா தனது பிள்ளைகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் தியாவும் தேவும் நன்றாகவே வளர்ந்திருக்கிறார்கள். முக்கியமாக தியாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்களாக ஜோதிகாவுக்கு திவ்யா டஃப் கொடுப்பாங்க போல இருக்கு என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.