பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான், நடிகை வித்யா பாலனின் தோற்றத்தை பற்றி விமர்சித்தது தற்போது பாலிவுட் சினி உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Courtesy: instagram
2/8
பாலிவுட் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை கரீனா கபூர் கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து 'Refugee' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே கரீனாவை நோட் செய்த ரசிகர்கள் இனி கரீனா தான் எங்களது கனவுக்கன்னி என்று ஃபிக்ஸ் செய்துவிட்டனர்.
Courtesy: instagram
3/8
தொடர்ந்து உடுடா பஞ்சாப், சமேலி உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்து பாலிவுட் சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதேபோல் பாலிவுட் சினிமாவில் அனைவராலும் ரசிக்கக்கூடிய நடிகையாக இருப்பவர் நடிகை வித்யா பாலன்.
Courtesy: instagram
4/8
பாலிவுட் சினிமாவில் கலக்கும் வித்யா பாலன், தமிழிலும் மணிரத்னம் இயக்கிய குரு, எச்.வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவிலும் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
Courtesy: instagram
5/8
இந்த நிலையில் நடிகை கரீனா சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளரின் கேள்விக்கு சர்ச்சையான பதில் கொடுத்துள்ளது தற்போது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Courtesy: instagram
6/8
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கெஸ்டாக பங்குபெற்ற கரீனாவிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார் அதில், "நீங்கள் காலையில் எழும்போது நடிகை வித்யா பாலனாக மாறிவிட்டால் எப்படி உணர்வீர்கள்" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கரீனாவின் பதில், "நான் வித்தியாசமாக கேவலமாக உணர்வேன்" என்று கட்டமாக சர்ச்சையான பதில் ஒன்றை கூறியுள்ளார்.
Courtesy: instagram
7/8
மேலும் மற்றொரு தொலைக்காட்சி நேர்காணலில் மீண்டும் நடிகை வித்யா பாலனை தாக்கி கரீனா பேசியுள்ளார். அதில், "The Dirty Picture என்ற திரைப்படத்திற்காக வித்யா பாலன் அவரது உடல் எடையை இருமடங்கு அதிகரித்துக்கொண்டார், உடல் எடை அதிகமாக இருப்பது அழகு என்று அவர் நினைக்கின்றார், மேலும் தற்போது உடல் எடை அதிகரித்து கொழுகொழுவென தோற்றமளிப்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது, ஆனால் நான் ஸ்லிம்மாக இருப்பதை தான் விரும்புவேன் குண்டாக மரமாட்டேன்" என்று கூறியுள்ளார்.
Courtesy: instagram
8/8
தற்போது கரீனா, நடிகை வித்யா பாலனின் தோற்றத்தை பற்றி இழிவாக பேசியது பாலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும் கரீனாவின் இந்த சர்ச்சையான கருத்திற்கு வித்யாவின் ரசிகர்கள் செம கடுப்பில் இருந்து வருகின்றனர்.