சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழி என இந்தியா அளவில் பெரிய அளவில் கொண்டாடப்படும் படமாக பிரபலமாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ள தமிழ் சினிமா படங்களில் இப்படம் முக்கியத்துவம் உள்ள படமாக புகழ் பெற்றுள்ளது. வசூலில் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை இனி இந்த ஆண்டு வெளியாகும் எந்த முன்னணி நடிகரின் திரைப்படம் முறியடிக்கும் என பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன, முழு விவரங்கள் இதோ.
ஜெயிலர் - சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம், ஜெயிலர். இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா மேனன் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி வசூல் ரீதியாக பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது.
வசூல் ரீதியாக இப்படம் 2023, ஆகஸ்ட் 19 வரை 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை இப்படம் விக்ரம் பட வசூலை ஒரே வாரத்தில் முறியடித்துள்ளது. வசூல் ரீதியாக இப்படம் உலகளவில் சாதனை படைத்திருக்கிறது. அடுத்து தமிழ் சினிமாவில் வெளியாகும் தமிழ் படங்களில் எந்த திரைப்படம் இப்படத்தின் சாதனையை முறியடிக்கும் என்னும் தகவல்கள் இந்த பட்டியலில் உள்ளன.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டு. LCU படங்களில் ஒன்றாக இப்படம் உருவாகவுள்ள நிலையில் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் இப்படம் வசூல் ரீதியாக கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வசூல் ரீதியாக லியோ திரைப்படம் பெரிய அளவில் சாதனை படைக்க வருகிறது என பல எதிர்பார்த்துள்ளனர்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி என பல பிரபலங்கள் நடிக்கும் வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படம். இதுவரை நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படங்களில் இப்படம் தான் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது என படக்குழு சார்பில் கூறியுள்ளனர். சூர்யாவின் கங்குவா படத்தினை தயாரிக்கும் ஸ்டூடியோக்ரீன் நிறுவனம் வசூல் ரீதியாக இப்படம் நிச்சியம் பெரிய அளவில் கொண்டாடப்படும் என உறுதியாக உள்ளார்.
பிரமாண்ட இயக்குனர் என புகழ் பெற்றுள்ள இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் திரில்லர் திரைப்படம், இந்தியன் 02. இப்படம் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 90களில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சி கதையாக உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதிரடி மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படம் பெரிய பட்ஜெட் படமாக உருவாகிறது. இப்படத்தின் ரிலீஸ் மற்றும் வசூல் ரீதியாக இப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் என எதிர்பார்த்துள்ளனர், படக்குழுவினர். ஜெயிலர் சாதனையை இப்படம் தவிடுபொடி ஆக்கும் என பலர் எதிர்பார்க்கின்றனர்.
அஜித்குமார் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகவிருக்கும் திரைப்படம். இப்படம் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை எனினும், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் உள்ளன. வசூல் ரீதியாக அஜித்குமார் படங்கள் பல வகைகளில் சாதனை படைத்து வரும் நிலையில், விடாமுயற்சி திரைப்படமும் பெரிய அளவில் கொண்டாடப்படும் என பல நிபுணர்கள் தங்களின் கருத்துக்களை கூறியுள்ளனர்.