அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வார இறுதியில் தொடங்கியுள்ளது.
துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய 62 ஆவது திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகினார்.
அதற்குப் பிறகு அஜித்தின் 62 ஆவது படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் மகிழ்திருமேனி அந்த திரைப்படத்தை இயக்குவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் படப்பிடிப்பு தொடங்குவதற்காக வேலைகளும் நடைபெற்றன. அந்த சமயத்தில் லைகா நிறுவனத்தின் அமலாக்க துறையின் சோதனை நடைபெற்றது. இதனால் அஜித் 62வது படத்தின் படப்பிடிப்பு தள்ளிச் செல்லலாம் என்ற செய்திகள் பரவின.
இந்த நிலையில் விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அஜித்தின் 62வது படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை குறைந்துள்ள அஜித் 13 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதுவரை விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என தெரியவரவில்லை. முதலில் நயன்தாரா என கூறப்பட்டது. பின் சில பாலிவுட் நடிகைகளின் பெயர் கூட அடிபட்டது
இந்த சமயத்தில் திரிஷா விடாமுயற்சி படத்திலிருந்து விலகி விட்டார் என நியூஸ் வெளிவந்தது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் செய்தியில், விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா தான் நடிக்கிறார் என்று கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.