தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் சிலர் டான்ஸ் மாஸ்டர், ஸ்டண்ட் மேன் உள்ளிட்ட துறைகளில் அறிமுகமாகி பின்னர் திரைப்படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து ஜொலித்து வருகின்றனர். குறிப்பாக சொல்லவேண்டுமானால் நடிகர் ராகவா லாரன்ஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் சினிமாவில் பிற துறைகளில் அறிமுகமே தற்போது நடிப்பில் கலக்கி வருகின்றனர்.
Courtesy: instagram
அந்தவகையில் திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு டான்ஸ் ஆடவேண்டும் என்ற கனவோடு சென்னை நோக்கி பயணித்து எதிர்பாராத விதமாக நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது சின்னத்திரையில் வில்லை கதாபாத்திரத்தில் கலக்கி வருபவர் நடிகை ஜீவிதா..
Courtesy: instagram
டான்ஸ் மாஸ்டராக ஆக வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்த ஜீவிதா, ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு சென்றப்போது எதிர்ச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. லடுக்கு ஆசைப்பட்டவருக்கு ஜிலேபி கிடைத்தது போல டான்ஸ் மாஸ்டராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜீவிதாவுக்கு நடிக்கவே சான்ஸ் கிடைத்துவிட்டது.
Courtesy: instagram
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜெயா டிவியில் ஒளிபரப்பான 'மனதில் உறுதி வேண்டும்' என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இந்த சீரியலில் ஜீவிதாவின் நடிப்பு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க தொடர்ந்து வைராக்கியம், ஆபிஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
Courtesy: instagram
குறிப்பாக ஆபிஸ் என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தனது கொடுக்கப்பட்ட வில்லி கதாபாத்திரத்தை தத்ரூபமாக நடித்து தாய்மார்கள் முதல் பெரியவர்கள் வைரி பலரின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.
Courtesy: instagram
வில்லி கதாபாத்திரம் ஜீவிதாவுக்கு ஒர்க் அவுட் ஆக தொடர்ந்து தேவதை, பாசமலர், மெல்லத் திறந்தது கதவு, நிலா, கண்மணி, எங்க வீட்டுப்பெண், சிவரகசியம் போன்ற பல தொடர்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிஸியான சின்னத்திரை நடிகையாக வலம் வர தொடங்கினார்.
Courtesy: instagram
மேலும் தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகும் திருமகள் சீரியலில் ஆனந்தவல்லி என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கு பெயர் போன ஜீவிதாவுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறித்து.
Courtesy: instagram
இதைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், அருண் விஜய் நடித்த யானை உள்ளக்கிட படங்களில் நடித்துள்ளார். இப்படியாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கி வரும் ஜீவிதாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Courtesy: instagram
ஜீவிதா தனது குடும்பத்துடன் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சின்னத்திரை ரசிகர்களின் லைக் மற்றும் கமெண்டுகளை அள்ளி வருகிறார்.