Pinterest
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தன்னுடைய கணவரை பிரிந்ததற்காண காரணத்தை முதன் முறையாக இணைய பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2016ல் பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் பிரியங்கா. மிகவும் சிறப்பாகவே இவரது குடும்ப வாழ்க்கை சென்றது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தன்னுடைய கணவர் குறித்த எந்த விஷயத்தையும் பகிர்ந்துக் கொள்ளாமல் இருக்கிறார்
.தன்னுடைய கணவருடன் தான் இணைந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்த பிரியங்கா, தற்போது அதையும் விட்டுவிட்டார்.
சமீபத்தில் இவரது கணவர் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், அடுத்த பதிவில் கூறுவதாக தெரிவித்து எஸ்கேப் ஆனார்.
இந்நிலையில் சமீபத்தில் திருமண வாழ்க்கை குறித்த ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா, நம்மை புரிந்துக் கொள்ளும் கணவர் இருந்தால், அவருக்கு நாமும் விசுவாசமாக இருந்தால் வாழ்க்கையில் அனைத்துமே சாத்தியமாகும் என்றும் கூறியுள்ளார்.
இந்த பதிலை அவர் விரக்தியாக பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், இதன் மூலம் தன்னுடைய விவாகரத்திற்கான காரணத்தை மறைமுகமாக பதிவு செய்துள்ளார் பிரியங்கா என்றும் ரசிகர்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.