தினம் தினம் வித விதமான பிகினி உடைகளை அணிந்துக் கொண்டு மாலத்தீவு கடற்கரையில் கவர்ச்சி காட்டேரியாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு டிரெண்டிங்கில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
தமிழில் அடுத்தடுத்து பெரிய படங்கள் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாக உள்ள நிலையில், தனது சம்மர் ஹாலிடேவை ஜாலியாக கொண்டாடி வருகிறார்.
கலர் கலர் பிகினியில் கிக்கேற்றும் கிளாமரில் போஸ் கொடுத்து வந்த ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஐஸ்க்ரீமை சாப்பிடும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
ஐஸ்க்ரீமே ஐஸ்க்ரீமை சாப்பிடுகிறதே: ரகுல் ப்ரீத் சிங் ஐஸ்க்ரீம் சாப்பிடும் அழகை பார்த்திபன் பார்த்தால் இப்படித்தான் வர்ணிப்பார் என நெட்டிசன்கள் ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட போட்டோக்களுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
மாலத்தீவில் சுற்றுலா செல்லும் நடிகைகள் வெறுமனே கவர்ச்சி போட்டோஷூட் மட்டுமே நடத்தி அதன் போட்டோக்களை மட்டுமே வெளியிட்டு வரும் நிலையில், விடுமுறையை ஜாலியாக எப்படி கொண்டாடுகிறேன் பாருங்கள் என ஹேப்பி போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் அயலான் ஹீரோயின்.
அந்த அழகே தனி தான்:
ஒழுக.. ஒழுக.. ஐஸ்க்ரீமை சாப்பிட்டுக் கொண்டே நடந்து செல்லும் போட்டோக்களை வரிசையாக பதிவிட்டு அதற்கு அவர் வாயைத் திறந்து கொடுத்த ரியாக்ஷனையும் போட்டோகிராஃபர் பக்காவாக கேப்சர் செய்துள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங் இப்படி ஐஸ்க்ரீம் சாப்பிடுற அழகே தனி அழகு தான் என்றும் எங்களுக்கும் கொஞ்சம் ஐஸ்க்ரீம் கிடைக்குமா என ரசிகர்கள் இன்ஸ்டா போட்டோக்களை பார்த்தே ஏங்கிப் போயுள்ளனர்.
தீபாவளிக்கு அயலான் ட்ரீட்:
இந்த ஆண்டு தீபாவளிக்கு ரகுல் ப்ரீத் சிங், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் வெளியாகிறது. இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்த படம் ஏலியன் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
அயலான் படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடித்துள்ள இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Read more at: https://tamil.filmibeat.com/heroines/rakul-preet-singh-screaming-for-ice-cream-photos-makes-fans-drool-109246.html?story=3

Read more at: https://tamil.filmibeat.com/heroines/rakul-preet-singh-screaming-for-ice-cream-photos-makes-fans-drool-109246.html?story=2
Read more at: https://tamil.filmibeat.com/heroines/rakul-preet-singh-screaming-for-ice-cream-photos-makes-fans-drool-109246.html
Read more at: https://tamil.filmibeat.com/heroines/rakul-preet-singh-screaming-for-ice-cream-photos-makes-fans-drool-109246.html