இதனால் குடிக்க ஆரம்பிச்சேன்.. ஊத்தி குடுத்து கெடுத்தாங்க… – ஊர்வசி வெளியிட்ட பகீர் தகவல்..!

post-img

 

குடிப்பழக்கம் பலரின் வாழ்க்கையை சீரழித்துள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இது எல்லோருக்கும் பொருந்தும்.
கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் போது குடிப்பவர்களை பற்றி பெரிதாக கவலை கொள்ள தேவையில்லை. போதை தெளிந்ததும் கொண்டாட்டம் முடிந்திருக்கும். ஒரு கல்யாணம், ஒரு காது குத்து, நண்பர்கள் பிறந்தநாள், குலதெய்வ விழாக்கள் இப்படி கொண்டாட்டங்கள் குறிப்பிட்ட நேரத்தில் முடிந்து விடும்.
ஆனால், சோகத்தை மறக்க, கவலையை மறக்க குடிப்பது தான் ஆபத்து. கவலையில் உள்ளவர்கள் குடிக்கலாம்.. ஆனால், போதை தெளிந்த பின்பும் அவர்கள் கவலை, சோகம் அப்படியே தான் இருக்கும்.


ஆனால், பெரும்பாலானோர் தற்காலிக விடுதலைக்காக நிரந்தரமாக குடிப்பழத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். அப்படி இருக்கும் இந்த குடி சினிமா துறையை சேர்ந்தவர்களையும் விட்டுவைக்கவில்லை.
இதையும் படிங்க :தனக்கு அம்மா கேரக்டரில் நடித்த நடிகையை வேட்டையாடிய பிரபல நடிகர்..!பல சினிமா பிரபலங்கள் குடியால் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். அந்த வரிசையில் நடிகை ஊர்வசி தனது சொந்த வாழ்க்கை அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
சமீபத்தில் நடிகை ஊர்வசி குடித்து விட்டு ஒருவரிடம் சண்டை போடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் தனக்கு குடிப்பழக்கம் வந்ததற்கு காரணம் தன் முன்னாள் கணவர் மனோஜ் கே.ஜெயின் தான் என்று ஊர்வசி கூறியுள்ளார்.
ஊர்வசியின் முன்னாள் கணவரும், நடிகருமான மனோஜ் கே.ஜெயினின் குடும்பத்தினர் கூட்டாக அமர்ந்து மது அருந்துவார்கள். எனக்கும் ஊத்தி கொடுத்து குடிக்க வைத்தார் அதனால் தான் தனக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டதாக ஊர்வசி கூறியுள்ளார்.
 

 

Related Post