மும்பை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் சூர்யா தனது மகனை புகைப்படம் எடுக்க வேண்டாம் என பத்திரிகையாளர்களிடம் கேட்டுக் கொண்டார். நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் மும்பையின் முக்கிய பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை அண்மையில் வாங்கியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், மும்பை விமான நிலையத்திற்கு தனது 13 வயது மகன் தேவ் உடன் காரில் வந்த நடிகர் சூர்யா, அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் தனது மகனை புகைப்படம் எடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.
அவர்களும், சூர்யாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதுடன், சூர்யாவை மட்டும் தனியாக செல்லும் படி கூறி, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டனர்.
சூர்யா தற்போது சிவாவின் இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதற்கிடையே, அவர் முன்னெடுக்கும் சத்யதேவ் சட்ட கல்வி நிலையத்தின் திறப்பு விழா சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, நடிகர் சூர்யா, முன்னாள் நீதிபதி சந்துரு, அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.