இந்தத் தொடரில் குறைவான கேரக்டர்கள் இருந்தபோதிலும் அனைவரும் சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தத் தொடரிலிருந்து முக்கியமான கேரக்டரில் நடித்துவரும் ஒருவர் விலகியுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகும் ரித்திகா: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பல மாதங்களாக மாஸ் காட்டி வந்த பாக்கியலட்சுமி தொடர் தற்போது தன்னுடைய நிலையிலிருந்து கீழிறங்கியுள்ளது. சேனலின் டிஆர்பி ரேட்டிங்கில் சில புள்ளிகள் சரிந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. Urban மற்றும் Urban +Rural கேட்டகரியில் தன்னுடைய முதலிடத்தை சிறகடிக்க ஆசை தொடரிடம் விட்டுக் கொடுத்துள்ளது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் கடந்த சில எபிசோட்கள் ரசிகர்களை கவர தவறிவிட்டது.
இந்நிலையில் தற்போது கேன்டீனில் பாக்கியாவின் டீம் சொதப்பிய நிலையில், கேன்டீன் கான்டிராக்ட் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பாக்கியா கதறி அழுததையும், அங்குவரும் பழனிச்சாமி மற்றும் லோபிகா அவருக்கு ஆதரவாக பேசியதையும் பார்க்க முடிந்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு, பாக்கியாவை கேன்டீன் கான்டிராக்டிலிருந்து வெளியேற்ற காய் நகர்த்தி வருகிறார் ராதிகா.
இதற்கான எபிசோட்களை கடந்த சில நாட்களாக ஒளிபரப்பி வந்தது பாக்கியலட்சுமி தொடர். எதற்கும் கலங்கும் சாதாரண பெண்ணாகவே இந்தத் தொடரில் காட்டப்படுகிறார் பாக்கியா. ஆனாலும் தன்னை விவாகரத்து செய்த தன்னுடைய கணவன் முன்னிலையில் மற்றும் மட்டம் தட்டிய சமூகத்தின் முன்னிலையில் தன்னை நிரூபிக்கும் வைராக்கியம் அவரை தற்போதைய நிலைக்கு கொண்டு வந்துள்ளது. சமையல் கான்டிராக்ட், கேன்டீன் கான்டிராக்ட் என்று அவர் தன்னை தொடர்ந்து முன்னேற்றி வருகிறார்.
மேலும் தன்னுடைய நிலையை மேம்படுத்திக் கொள்ளும்வகையில், ஆங்கில வகுப்பு, கல்லூரி படிப்பு என அடுத்தடுத்த கட்டங்களில் முன்னேறி வருகிறார். இவரது முன்னேற்றத்திற்கு குடும்பத்தினரும் உறுதுணையாக உள்ளனர். குறிப்பாக எழில் மற்றும் அவரது மனைவி அமிர்தா சிறப்பாக சப்போர்ட் செய்து வருகின்றனர். தன்னுடைய அம்மாவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் சப்போர்ட் செய்கிறார் எழில். அவர் கல்லூரியில் சேரவும் முக்கிய காரணமாக அமைகிறார்.
அதேபோல பாக்கியா கல்லூரிக்கு செல்வதால், எழில் மனைவி அமிர்தா, அவருக்கு பதிலாக கேன்டீனை பார்த்துக் கொண்டார். அந்த அளவிற்கு முக்கியமான இந்த கேரக்டரில் நடிகை ரித்திகா நடித்து வந்தார். இந்நிலையில் அவர் சீரியலில் இருந்து தற்போது விலகியுள்ளார். கடந்த ஆண்டில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளது ரசிகர்களுக்கு ஷாக் அளித்துள்ளது. அவருக்கு பதிலாக காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்துவரும் அக்ஷிதா அசோக் அந்த கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.