விஜய் டிவியின் 'பிரிவோம் சந்திப்போம்' பிரபல சீரியல் மூலம் அறிமுகமானவர் சின்னத்திரை நடிகை ரச்சிதா.
விஜய் டிவியின் 'பிரிவோம் சந்திப்போம்' பிரபல சீரியல் மூலம் அறிமுகமானவர் சின்னத்திரை நடிகை ரச்சிதா.
2013 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர், திருமணத்திற்கு பின்பும் நடிப்பதை தொடர்ந்தார் நடிகை ரச்சிதா.
அதன் பின் சரவணன் மீனாட்சி தொடரின் 2 ஆம் பாகத்தில் நடித்த ரச்சிதாவுக்கு அந்த சீரியல் மாபெரும் பெயரை பெற்று கொடுத்தது.
மக்கள் மத்தியில் ரச்சிதா மிகவும் பிரபலமானார், அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி 3 ஆம் பாகம், நாம் இருவர் நமக்கிருவர் தொடர் ரச்சிதாவுக்கு ஹிட் கொடுத்தது.
இதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6-ல் நுழைந்த ரச்சிதா பல இதயங்களை வென்றார்.
திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசாத இவர், சமீபத்தில் கணவர் தினேஷ் மீது போலீசில் மிரட்டுவதாக புகார் கொடுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ரச்சிதா நெஞ்சில் அழகிய ஆந்தை ஒன்றை டாட்டூ போட்ட புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அவரின் இந்த டாட்டூ புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக அதே இடத்தில் இதயம் மாதிரியான டாட்டூவை வரைந்திருந்தார் ரச்சிதா. கணவர் உடனான பிரிவுக்கு பிறகு அந்த டாட்டூவை மறைத்து வேறு டாட்டூ வரைந்துள்ளார்.